உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிரியல் பூங்கா நவம்பரில் திறப்பு

உயிரியல் பூங்கா நவம்பரில் திறப்பு

புதுடில்லி:பறவை காய்ச்சல் பரவல் காரணமாக ஆகஸ்ட் 30ம் தேதி மூடப்பட்ட, டில்லி தேசிய உயிரியல் பூங்கா நவம்பரில் திறக்கப்படுகிறது. டில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பரவி, அடுத்தடுத்து ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து, ஆகஸ்ட் 30ம் தேதி பூங்கா மூடப்பட்டது. மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டன. சமீபத்தில் நடத்திய பரிசோதனையில், பறவைக் காய்ச்சல் தொற்று எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நவம்பர் முதல் வாரத்தில் டில்லி தேசிய உயிரியல் பூங்காவை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ