உள்ளூர் செய்திகள்

குற்றச்சாட்டுகளின் பிடியில் ஏ.ஐ.சி.டி.இ.,

இந் நிறுவனத்தின் செயல்பாடு குறித்த கடுமையான விமர்சனங்கள் பார்லிமெண்டில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதன் சாராம்சங்கள் சில.. *தொழிற்படிப்புகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தேவையை உணர்ந்து வெற்றிடங்களை சரி செய்வதற்குரிய ஆய்வு முயற்சிகள் எதையும் ஏ.ஐ.சி.டி.இ., செய்யவில்லை. *சில கல்வி நிறுவனங்களின் தேவை மற்றும் தன்மைக்கேற்ப தன்னாட்சி வழங்கும் கடமை இந்த நிறுவனத்துக்கு இருந்த போதும் அதைச் செய்ய ஏ.ஐ.சி.டி.இ., தவறிவிட்டது. *எந்த அனுமதியும் பெறாத நிலையில் 62 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. *தொழில்நுட்பக் கல்வி முறை இந்தியாவில் சில பகுதிகளில் அதிகம் வளர்ச்சி பெற்றும் மற்ற பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியையும் கண்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் அதிகாரத்துக்குட்பட்ட திட்டங்களில் நிர்வாகக் குறைபாடு இருப்பதோடு எந்த புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. *இந்தியாவில் தொழில் நுட்பக் கல்வி குறித்த எந்த கள ஆய்வையும் ஏ.ஐ.சி.டி.இ., மேற்கொள்ளவில்லை. *இந்த காரணங்களால் இந்தியாவின் தேவைக்கேற்ற கல்வி வளர்ச்சியையும் மேம்பாட்டையும் தொழிற்கல்வித் துறையில் பெற முடியவில்லை என்றும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !