உள்ளூர் செய்திகள்

மனிதர்களின் மனதை ஆராயும் சைக்காலஜி படிப்பு

மனம் ஒரு குரங்கு என்பதற்கேற்ப மாறிமாறி செயல்படும் தன்மை கொண்டது. ஒருவரின் மனதை அறிவது என்பது சாதரண விஷயம் அல்ல. அது எந்நிலையில் எப்படி மாறும் என்று யாராலும் கூற முடியாது. இவ்வாறு விநோத செயல்பாடு கொண்ட மனிதர்களின் அறியும் சைக்காலஜி படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. லேடி ஸ்ரீ ராம் காலேஜ், டில்லி:  பெண்கள் மட்டும் பயிலக்கூடிய இக்கல்வி நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று ஆண்டு இளங்கலை, முதுகலையில் சைக்காலஜி படிப்பை வழங்குகிறது. கல்வித் தகுதி: பிளஸ் 2. சேர்க்கை: பிளஸ் 2வில், ஆங்கிலப் பாடத்தில், 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://lsr.edu.in/index.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம். கிறிஸ்துவ பல்கலைக்கழகம், பெங்களூரு: இக்கல்வி நிறுவனம், மூன்று ஆண்டு சைக்காலஜி படிப்பை வழங்குகிறது. கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களோடு பிளஸ் 2வில் தேர்ச்சி. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நேர்முகத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு என்ற www.christuniversity.in/index.php என்ற இணையதளத்தை பார்க்கலாம். பாரதியார் பல்கலைக்கழகம்  கோயம்புத்தூர்: இக்கல்வி நிறுவனம் இரண்டு, மூன்று ஆண்டு சைக்காலஜி படிப்புகளை வழங்குகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு http://www.b-u.ac.in/index.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம். அமிதி இன்ஸ்டிடியூட் ஆப் சைக்காலஜி அண்ட் அலைடு சயின்ஸ், டில்லி: இக்கல்வி நிறுவனம் மூன்று ஆண்டு அப்ளைடு சைக்காலஜி, ஐந்து ஆண்டு கினினிக்கல் சைக்காலஜி படிப்பை வழங்குகிறது. கல்வித்தகுதி: பிளஸ்2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விபரங்களுக்கு என்ற http://amity.edu/default.asp இணையதளத்தை பார்க்கலாம். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்  வாரணாசி:இக்கல்வி நிறுவனம் மூன்று ஆண்டு பி.ஏ., மற்றும் இரண்டு வருட எம்.ஏ., சைக்காலஜி படிப்புகளை வழங்குகிறது. கல்வித்தகுதி: 45 சதவீத மதிப்பெண்களோடு பிளஸ் 2 மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு என்றwww.bhu.ac.in/socialscience/index.html இணையதளத்தை பார்க்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்