உள்ளூர் செய்திகள்

ஃபார்மசிஸ்ட் படிப்பின் முக்கியத்துவம்

விருந்தினர்கள் கடவுள் போன்றவர்கள் என்ற முதுமொழி இந்தியர்களின் விருந்தோம்பலைப் பறைசாற்றும். சுற்றுலா என்பதும் ஒருவகை விருந்தோம்பலே. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆயத்த ஆடைகள், ஆபரணக் கற்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் பிடித்திருப்பது சுற்றுலாத்துறை என்பதில் பலருக்கும் ஆச்சரியம் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. சுற்றுலாத்துறை என்பது தனித்துறை அல்ல; பல துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கொண்டது. ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி இந்தியாவில் ஒரு வேலைவாய்ப்பையும்; 17 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்குகின்றனர் என்பதில் இருந்தே இத்துறையின் வேலைவாய்ப்பை நன்கு புரிந்து கொள்ள முடியும். சுற்றுலாத்துறையில் பணிபுரியும் ஒருவர், தான் மட்டுமின்றி இதர துறைகளைச் சேர்ந்த 1.36 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு என்பது டூரிஸ்ட் கைடு மட்டும் அல்ல. குடியேற்றம், சுங்கம், பயண முகவர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், தங்கும் விடுதிகள், என பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது; ஏராளமான பணி வாய்ப்புகளை உள்ளடக்கியது.இத்துறையில் தேர்ந்த பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.சூழலியல் சுற்றுலா(எகோ டூரிசம்), மருத்துவச் சுற்றுலா, ஓய்வு நேர சுற்றுலா, புராதன, கலாச்சார சுற்றுலா. ஆன்மிக சுற்றுலா, கல்விச் சுற்றுலா எனப் பலவகை சுற்றுலாக்கள் உள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் இந்திய சுற்றுலா இரண்டு மடங்கு வளர்ச்சி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது அத்துறைக்கு திறமையான நபர்கள் தேவைப்படுவர். சுற்றுலாத்துறையால், உள்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள், உள்ளூர்வாசிகளுக்கான அடிப்படைத் தேவைகள் உயரும். அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் கணிசமான பங்கு சுற்றுலாத்துறைக்கு உள்ளது. எனவே, இத்துறையின் வளர்ச்சியில் அரசும் அக்கறை கொண்டுள்ளது. பயண ஏற்பாட்டாளராக இருப்பவர் தனது துறைசார்ந்த பல்வேறு விஷயங்களையும், சமீபத்திய நடப்புகளையும் தெரிந்து கொண்டவராக இருப்பது அவசியம். விசா, பாஸ்போர்ட் நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் போன்றவற்றிலும் இதுதொடர்பாக கடைசியாக செய்யப்பட்ட மாறுதல்களையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். பயணம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக ஏராளமான சான்றிதழ், பட்டயப்படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இளநிலைப் பட்டப்படிப்புக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புக்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு அவசியம். சில கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்கின்றன. நன்கு பழகும் தன்மையும், சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இத்துறை மிகச்சிறந்த தேர்வு. பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தன்மையும், ஆங்கிலத்தில் பேசும் திறனும் அவசியம். வெளிநாட்டு மொழி ஒன்றைத் தெரிந்து வைத்திருப்பது கூடுதல் தகுதி.இத்துறையில் படிப்பை முடித்தவர்கள், விமானங்களில் டிராபிக் அசிஸ்டன்ஸ், பதிவு செய்தல், கவுன்டர் பணி, விமானப் பணிப்பெண், விமான பயணிகள் நல அலுவலர், விற்பனை மற்றும் சந்தைப்பிரிவு, வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணிபுரியலாம். சரக்கு கையாள்தல் பிரிவு, சுற்றுலா மைய அலுவலகங்கள், பயண ஏற்பாட்டாளர் அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. படிப்பை முடித்த உடன் 8,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையும்; இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றால் ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரையும் ஊதியம் பெறலாம். 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மத்திய, மாநில அரசுப்பணி பெறுவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. இத்துறை சார்ந்த அடிப்படை மற்றும் சான்றிதழ் படிப்புகள்:1) Airlines Management course2) Basic course in Air and Sea Cargo3) Service Management Basic Course in Airline Travel, Fares & Ticketing Management4) Basic Course in Computer Application & Software Studies Basic course in Computerized Reservation System5) Basic course on Airlines Travel Agency & Tour Operation Management6) Certificate course in Airlines Ticketing &Tour Planning7) Course in Domestic, International Ticketing & Airlines with Computer8) Course in Airlines, Tourism, Tours & Travel Management with Marketing & Ticketing Foundation & Consultant course in International Tourism Language course9) Certificate course in Tourist Guide Diploma Courses:1) Diploma Course in Multimodal Transport & Logistics Management2) Diploma Course in  Rail Transport & Management Diploma course in Transport Economics & Management3) Diploma in Tourism & Destination Management4) Diploma in  Hotel & Tourism Management5) Diploma in Tourism & Travel Management6) Diploma in Tourism Management7) Diploma in Travel & Tourism Indusry Management Bachelor Courses:1) Bachelor in Tourism Administration2) Bachelor of Hotel& Tourism Management3) Bachelors degree on Tourism and Hospitality Management4) Graduate Integrated course in Tourism5) Vocational Program in Tourisim & Travel Manangement PG Diploma Courses:1) PG Diploma in Airlines2) PG Diploma in Business Administration (Tourism)3) PG Diploma in Cargo Operation & Management4) PG Diploma in Destination Management5) PG Diploma in Guiding & Destination management6) PG Diploma in Travel & Tourism Management7) PG Diploma in Tourism & Hotelierng Management8) PG Diploma in Tourism & Hotel Management9) PG Diploma in Tourism Management10) PG Diploma in Travel Management Master/PG Corses:1) Master Of Tourism Administration2) Master Of Tourism Management3) Master Of Travel & Tourism Management இவை தவிர இன்னும் ஏராளமான படிப்புகள் இத்துறை சார்ந்து உள்ளன. இப்படிப்புகளை நாடுமுழுதும் ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றுள் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் சில... KUONI Academy, Chennai; Monarch International college of Hotel Management, Pudumund, OotyMother Terasa Women's University, KodaikanalMadurai Kamaraj University, MaduraiUniversity Of Madras, ChennaiAnnamalai University, Annamalai NagarG.R.Damodharan Academy Of Management, CoimbatoreInstitute For Social Sciences and Research, Vellore தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள்Alagappa University, KaraikudiAnnamalai University, Annamalai NagarBharathiar University, CoimbatoreBharathidasan University, TiruchirappalliMadurai Kamaraj University, MaduraiPeriyar University, Salem


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்