உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் பொறியியல் படிப்புகள்

எங்கும் பொறியியல், எதிலும் பொறியியல் என்று, பொறியியல் மோகம் இந்திய மாணவர்களை பல ஆண்டுகளாகவே ஆட்டிப் படைத்து வருகிறது. சாலைகள் அமைத்தல், கட்டடங்கள் கட்டுதல், ஆட்டோமொபைல், தகவல்தொடர்பு, மின்னணு புரட்சி உள்ளிட்ட சகலவித செயல்பாடுகளுக்கும் பொறியாளர்களின் தேவை அவசியம். பொறியியல் படிக்கும் மற்றும் படிப்பதற்கு ஆசைப்படும் மாணவர்கள் இந்தியாவில் மிக மிக அதிகம். இந்தியாவின் பொறியியல் பட்டங்களிலேயே, IIT வழங்கும் பட்டமே முதன்மையானது என்பது பலரும் அறிந்ததே. உயர்கல்வி மற்றும் தொழில்துறையின் பலவித பிரிவுகளில் பொறியாளர்கள் மற்றும் பொறியியல் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். IIM வழங்கும் மேலாண்மை படிப்புகளில் 80% இடத்தை, பொறியியல் பட்டதாரிகளே கைப்பற்றுகின்றனர். அப்துல்கலாம், நாராயண மூர்த்தி, மெட்ரோ ரயில் ஸ்ரீதரன், ஹாட்மெயில் சபீர் பாட்டியா போன்ற பலரும் பொறியியல் மாணவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்கள். முக்கிய பொறியியல் பிரிவுகள் கால மாறுதல்களுக்கு ஏற்ப, பொறியியல் படிப்புகளின் பிரிவுகள் மாறி மாறி முக்கியத்துவம் பெற்றாலும், சில பிரிவுகள் எல்லா காலத்திலுமே முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றன. அவற்றில், கணிப்பொறி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் போன்றவை. நுழைவுத் தேர்வுகள் மாநில அரசின் நிதியுதவிப் பெறும் முக்கிய பொறியியல் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதற்கு நடத்தப்படும் IIT-JEE மூலம் சேர்க்கைப் பெறுபவர்கள் மிகவும் குறைந்தளவே உள்ளனர். இது மிகவும் முக்கியமான நுழைவுத் தேர்வாகும். இதற்கடுத்த முக்கிய பொறியியல் நுழைவுத் தேர்வாக AIEEE உள்ளது. இந்தத் தேர்வை கடந்த 2011ம் ஆண்டு மட்டும், 1685 மையங்களில் சுமார் 10.5 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இந்த AIEEE தேர்வானது, நாடு முழுவதிலுமுள்ள 20 NITs, 4 IIITs , IIITM, 16 சுயநிதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 9 பிற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படுகிறது. இந்த 2 முக்கிய நுழைவுத் தேர்வுகளைத் தவிர, 2 தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளும், மாநிலங்கள் தனித்தனியாக நடத்திக் கொள்ளும் பலவிதமான நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. நாட்டில் பொறியியல் படிக்கத்தக்க சில முக்கியமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பார்க்கலாம். Indian Institutes of Technology, Anna university - Chennai, ISM - Dhanbad, IT - BHU, Indian institute of science education and research (IISERs), National Institutes of Technology, Indian institutes of information Technology, BITS, Delhi Technology university, NSIT - New Delhi, Jadavpur university - Jadavpur, VIT university - Vellore, Thapar university - Patiala, ICT - Mumbai, MNNIT - Allahabad, DA-IICT - Ahmedabad, JNTU - Hyderabad, PSG Technology - Coimbatore, College of Eng. - Pune, MIT - Manipal, PES Inst. of Tech - Bangalore, R.V. College of Eng and Sir MV Inst. of Tech - Bangalore.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்