பேஷன் கம்யூனிகேஷன் படித்தால் சிறந்த வாய்ப்புகள்!
இந்திய பேஷன் சில்லறை விற்பனை சந்தை, பெரும் போட்டி நிறைந்ததாக இருப்பதால், அதில் நிலைத்து நிற்க, ஒவ்வொருவரும் பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால், ஒவ்வொருவரும் தமது பொருளின் அடையாளத்தை முதன்மைப்படுத்தி, சிறப்பாக விளம்பரப்படுத்த வேண்டும். இத்தகைய சவாலான பணியை முடிப்பதற்கு, பேஷன் கம்யூனிகேஷன் ப்ரொபஷனல்கள் சரியான ஆட்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். அவர்கள், வடிவமைப்புத் துறையின் பல்வேறான அம்சங்களில் நிபுணத்துவம் பெற்று திகழ்கிறார்கள். பேஷன் கம்யூனிகேஷன் துறையில், 3 வருட இளநிலைப் பட்டப் படிப்பை, Satyam Fashion Institute வழங்குகிறது. பேஷன் வணிகம், சில்லறை வணிகம், இதழியல் துறையின் தகவல்தொடர்பு பிரிவு(Communication fields of journalism), செய்தித்தாள், தொலைக்காட்சி, செய்தி எழுதுதல் மற்றும் சிறப்பு சம்பவங்களை முன்னிலைப்படுத்தல் ஆகிய பணிகளில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு இப்படிப்பு ஏற்றதாக உள்ளது. மேலும், இப்படிப்பானது, வடிவமைப்பு, தொழில்நுட்ப வரைதல், பேஷன் படிப்புகள், சந்தைப்படுத்தல் கொள்கைகள், பேஷன் ஸ்டைலிங், பேஷன் ஜர்னலிசம் மற்றும் போர்ட்போலியோ(Portfolio) மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படைகளைக் கொண்டுள்ளது. இத்தொழிலில், வெற்றியடைவதற்கான அம்சங்களை மாணவர்களுக்கு கற்பிக்க இப்படிப்பு முக்கியத்துவம் கொடுக்கிறது. பேஷன் தொழிலுடன் சம்பந்தப்பட்ட பலவிதமான பயன்பாடுகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் சிக்கலான முடிவெடுத்தல் திறன் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களுக்கு இப்படிப்பு கற்பிக்கிறது. படைப்புத்திறனுள்ள மாணவர்கள், மீடியாத் துறையில் சிறந்து விளங்கவும், பேஷன் துறையில் புகழ்பெற்று விளங்கும் கலாச்சார நிறுவனங்களில் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், இப்படிப்பு தயார் செய்கிறது. புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தல், ஸ்டோர் நிகழ்வுகள், Catwalk நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிப் பத்திரிகை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், விசுவல் இமேஜரி, டெக்ஸ்ட், தகவல் மற்றும் அனுபவ டிசைன் ஆகிய பல அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது. பேஷன் கம்யூனிகேஷன் துறையில் 4 வருடப் படிப்பை NIFT வழங்குகிறது. visual merchandising, styling, graphic design, display and exhibit design, advertising, public relations, and creative writing உள்ளிட்ட பலவிதமான துறைகளை இது உள்ளடக்கியுள்ளது.இந்தப் படிப்பை முடித்தபிறகு, marketing, management, entrepreneurship, broadcast production, fashion journalism, reporting and editing, fashion advertising, public relations, publicity, visual merchandising, store planning, special event coordination and fashion photography போன்ற ஏராளமான துறைகளில் மாணவர்களால் ஈடுபட முடியும். ஆகையால், சிறப்பான திறன்கள், அறிவு மற்றும் கருத்து அடிப்படையை வளர்த்துக் கொள்வதன் மூலம், ஒரு மாணவர், பேஷன் மற்றும் lifestyle தொழில்துறையில், உள்ள சிக்கல்களைத் தீர்த்து, வெற்றிகரமான நிபுணராக பரிணமிக்க முடியும். இப்படிப்பிற்கான தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10+2 முடித்திருக்க வேண்டும். கட்டணம் 2.4 லட்சம்(at Satyam Institute) ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு ரூ.2 லட்சம் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் NIFT மற்றும் Satyam Fashion Institute, Noida போன்றவை.