உள்ளூர் செய்திகள்

உற்பத்தி பொறியாளர் என்பவர்......

பலவிதமான தொழில்துறை மற்றும் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், முழுமையாகவும், சரியாகவும் உற்பத்தி செய்யப்படும் செயல்பாட்டின் ஆதார நிலையில் ஈடுபட்டிருப்பவர்கள் Manufacturing பொறியாளர்கள். பொருட்கள் உற்பத்தியின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, திட்டமிடுதல், மேற்பார்வையிடல், உற்பத்தி முறைகள் மற்றும் உபயோகிக்கப்படும் கருவிகள் ஆகியவைப் பற்றி, தொடக்கம் முதல் முடிவுவரையான செயல்முறை அறிவை அவர்கள் பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு இயந்திரமும் இருக்கும் இடம், ஒவ்வொரு கருவி அல்லது பாகத்தின் நகர்வு, ஒட்டுமொத்த இயக்கத்தின் வரிசையமைப்பு, இயந்திரங்களை தேர்வுசெய்தல் போன்றவை உள்ளிட்ட, ஒரு ஒட்டுமொத்த உற்பத்தி செயல்பாட்டின் அனைத்து முடிவுகளையும் Manufacturing பொறியாளர் மேற்கொள்கிறார். இத்துறை பொறியாளர்கள், ஒட்டுமொத்த உற்பத்தி தொழில்துறைகளிலும் வேலை வாய்ப்பினை பெறுகிறார்கள். Manufacturing engineer, Process engineer,Production engineer, Tool engineer, Industrial engineer and Quality engineer போன்ற குறிப்பிட்ட நிலைகளில் ஆரம்பநிலை பணி வாய்ப்புகள் அமைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !