உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்புள்ள முதுகலை டிப்ளமோக்கள்

நாட்டில் தற்போது, உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் சில குறிப்பிட்ட துறையை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் அத்துறையில் வேலைவாய்ப்பு கடினமாக உள்ளது. அதற்கு பதில், வேலைவாய்ப்புள்ள பிற துறைகளின் மீதும், மாணவர்கள் கவனம் செலுத்தினால் வேலை கிடைக்கும், போட்டியும் குறையும். எந்தப் படிப்புமே பயனற்றது இல்லை. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் ஒரு வித வாய்ப்புகள் உள்ளன. இவ்வரிசையில், வேலைவாய்ப்புள்ள முதுகலை டிப்ளமோ பாடப்பிரிவுகள் பல உள்ளன. * நிட்டிங் அண்டு கார்மெண்ட் டெக்னாலஜி இருபது ஆண்டுகாலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக, பின்னலாடை தொழில் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபடவும், சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் டிப்ளமோ உதவுகிறது. தைத்தல், பின்னுதல், எம்பிராய்டரி, நூல் உற்பத்தி, நெசவு, இயந்திரங்கள் மூலம் இயக்குதல், கணினி மூலம் இயக்குதல், அளவீடுகள், குறியீடுகள், தரநிர்ணயம் செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பிரிவுகளில், அடிப்படைகளை இப்படிப்பு கற்றுத் தருகிறது. * ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி மருத்துவ துறையில் இப்போது கதிரியக்கத்துறையின் வளர்ச்சி காரணமாக, ரத்தக் குழாய் அடைப்பு முதலான நோய்களை, முன்பே கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெறுகின்றனர். இந்த டிப்ளமோ படிப்பு, கதிரியக்கத் துறையில் தத்துவங்களையும், வேலைகள், நவீன வளர்ச்சிகள் பற்றி தெரிந்து கொள்வதுடன், நோயாளிகளை எப்படி கதிர்வீச்சுக்கு உட்படுத்துவது என்ற முறைகளையும் கற்றுத் தருகிறது. * ரேடியோதெரபி டெக்னாலஜி கடந்த 25 ஆண்டுகளில், மருத்துவ துறையில் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், ஆராய்ச்சி செய்வதிலும் எக்ஸ்ரே என்ற இந்த முறை, நவீன யுக்திகளை தந்துள்ளது. இப்பட்டய படிப்பு எக்ஸ்ரே பிரிவில், தனியாக மருத்துவமனை நடத்தும் அளவிற்கு அமைந்துள்ளது. * பேக்கரி சயின்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் பேக்கரி அறிவியல் நிர்வாகம் என்பது, பேக்கரி தயாரிக்கும் அறிவை வளர்க்கிறது. ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்கும் முறையையும் விவரிப்பதுடன், உணவு பொருட்கள், தயாரிக்கும் முறைகள் பற்றிய அரசின் கட்டுப்பாடுகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. இத்துறை, மாணவர்களின் நிர்வாகத் திறமையையும், ஆராய்ச்சி, தயாரிப்புத் திறனையும் வளர்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !