உள்ளூர் செய்திகள்

திருப்பம் தரும் திரைத்துறை

திரைப்படத் தயாரிப்பு, தமிழகத்தின் முக்கிய தொழில் துறை. இந்தியாவில், திரைப்படங்கள் பெரும் ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளன. ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக இந்திய சினிமா தான், உலகின் இரண்டாவது பெரிய தொழில் துறை. தொழில்நுட்ப வளர்ச்சியிலும், இந்திய படங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இதற்காக திரைப் பள்ளிகளில், திரைப்பட உருவாக்கத்தின் தொழில்நுட்பம், கலை மற்றும் அழகியல் அம்சங்கள், வீடியோ கேமராவைப் பயன்படுத்துவது, எடிட்டிங் கருவியைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் முறையில் படங்களை தயார்படுத்துவது, எடிட்டிங் நுட்பங்கள் போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வழங்கப்படும் படிப்புகள் 1. முதுகலை டிப்ளமா ( டைரக்ஷன்)  3 ஆண்டு2. முதுகலை டிப்ளமா ( சினிமேட்டோகிராபி)  3 ஆண்டு3. முதுகலை டிப்ளமா ( சவுண்டு ரிக்கார்டிங் அண்டு சவுண்டு டிசைன்)  3 ஆண்டு4. முதுகலை டிப்ளமா ( எடிட்டிங்)  3 ஆண்டுகள்5. முதுகலை டிப்ளமா ( ஆக்டிங்)  2 ஆண்டுகள்5. முதுகலை சர்ட்டிபிகேட் கோர்ஸ் (ஸ்கீரின்பிளே ரைட்டிங்)  1 ஆண்டு கல்வித் தகுதிகள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை டிப்ளமோவில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, திரைப்பட நெறிமுறைப்படுத்துதல், எடிட்டிங் போன்றவையும் உள்ளன. 3 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியில் பாடங்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இப்படிப்புகளை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லுõரிகள் வழங்குகின்றன. வேலை வாய்ப்புகள் ஒளிப்பதிவு, விளம்பரங்கள், எழுத்து, தயாரிப்பு, படப்பிடிப்புக்கான இடங்களை தேடுதல், நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்தல், ஒப்பனை , சிகை அலங்காரம், இயக்கம், அனிமேஷன், உடைகளை வடிவமைத்தல், திரைக்கு பின்னே உள்ள வேலைகள் என பல வாய்ப்புகள் திரைத்துறையில் கொட்டிக்கிடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !