உள்ளூர் செய்திகள்

நீங்களும் துப்பறியும் புலியாகலாம்

தடயவியல் அறிவியல் (பாரன்சிக் சயின்ஸ்) என்பது, குற்றம் அல்லது சிவில் தொடர்பான கேள்விகளுக்கு, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பதிலளிக்கும் துறை. கைரேகை, ரத்தம், எச்சில், முடி போன்ற எத்தகைய தடயங்களையும் ஆராய்ந்து, துப்பு துலக்குவதற்கான நவீன வழிமுறைகளை அறிந்தவர்களே தடயவியல் வல்லுனர்கள். இவர்கள், பாரன்சிக் சயின்டிஸ்ட்ஸ் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் காவல் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். துப்பு துலக்குவதில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் சாதிக்க முடியும். தேவையான தகுதிகள் பிளஸ்2வில் அறிவியல் பாடத்தை முடித்திருப்பவர்கள், இந்த துறையில் சேரலாம். கிரகிக்கும் ஆற்றல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், குழுவாக பணியாற்ற தயாராக இருத்தல், ஆகியவை இத்துறைக்கு தேவையான அடிப்படை தகுதிகளாக கருப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள் * டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்பல்கலைக்கழகம், ஆக்ரா,* டாக்டர்.ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகம், சாகர்,* மைசூர் பல்கலைக்கழகம், மைசூர், * அமித்தி இன்ஸ்டிடியூட் ஆப் பாரன்சிக், நொய்டா, * பன்டல்கண்ட் பல்கலைக்கழகம். வேலை வாய்ப்புகள் இந்தியாவிலேயே நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதுநிலை டிப்ளமோ மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளாக, பாரன்சிக் சயின்ஸ் கற்பிக்கப்படுகின்றது. இவை பெரும்பாலும் கிரிமினாலஜியுடன் சேர்த்து கற்பிக்கப்படும். இந்த படிப்புகளை முடித்தவர்கள் வெளிநாடுகளிலும் பணியாற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !