உள்ளூர் செய்திகள்

ஸ்...ஸ்...ஸ்...சிக்ஸ் சிக்மா

பெரும்பாலான நிறுவனங்களில், சிக்ஸ் சிக்மா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளில், உலகில் பல நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அதாவது மிச்சப்படுத்தியுள்ளனர். நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனிநபர்களும் இதனை பின்பற்றி தொழில்துறையில் வெற்றி பெறலாம். சிக்ஸ் சிக்மா என்றால் என்ன? தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனையும், தரத்தையும் மேம்படுத்த, 1986ம் ஆண்டு, உற்பத்தியில் ஏற்படும் பிழைகளை கண்டுபிடிக்க, அமெரிக்காவின் மோட்டாரோலா நிறுவனம் அறிமுகப்படுத்திய உத்திதான் சிக்மா. பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணாமல், அதன் அடி வேரைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது இதன் நோக்கம். முதலில் திட்டமிட்ட முறைகளில் இருந்து, இறுதியில் உருவாக்கப்படும் பொருளோ, சேவையோ எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதை அறிந்து, அதை சரி செய்யும் குவாலிட்டி கன்ட்ரோல் முறை என இதை கூறலாம். இதை பின்பற்றி, பல நிறுவனங்கள், சேவையையும், பொருட்களின் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதே இதன் முக்கிய பணி. எங்கு படிக்கலாம்? சிக்ஸ் சிக்மா பயிற்சி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்படுகிறது. இதில் பிளாக் பெல்ட் மற்றும் கிரீன் பெல்ட் என இரு வகைகள் உள்ளன. இது இத்துறையில் உள்ள வல்லுனர்களின் நிலையை குறிக்கிறது. சென்னையில் உள்ள இந்தியன் ஸ்டேட்டிஸ்டிகல் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் சிக்ஸ் சிக்மா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பல தனியார் நிறுவனங்களில் இதற்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யார் படிக்கலாம்? ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் குவாலிட்டி மேனேஜ்மென்ட்டில் போதிய அறிவு, சிந்தனைத் திறன் உள்ள எவரும் இப்பயிற்சி வகுப்புகளில் சேரலாம். இப்பயிற்சியை முடிப்பவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதன் பணிகள் வாடிக்கையாளர்களுக்கான விருப்பத்தை தெரிந்து கொள்வது* அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயல்வது* தேவைக்கும், பூர்த்திக்குமான இடைவெளியை குறைப்பது* வியாபாரத்தில் விரைவான மற்றும் நிலையான முறையை பின்பற்றுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !