உள்ளூர் செய்திகள்

காமர்ஸ் ஒலிம்பியாட் - 2023

தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின், கரியர் கவுன்சிலிங் கமிட்டி, மாணவர்களுக்கான காமர்ஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது.தகுதி: ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இப்போட்டியில் 8ம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.தேர்வு முறை: முற்றிலும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இப்போட்டியில் மொத்தம் 100 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு பதில் அளிக்க 60 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.பாடப்பிரிவுகள்:8, 9 மற்றும் 10ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு சோசியல் ஸ்டடீஸ், கணிதம், பிசினஸ் அவேர்னஸ் மற்றும் ஆப்டிடியூட் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 11, 12 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பிசினஸ் ஸ்டடீஸ், அக்கவுண்டன்சி, எக்னாமிக்ஸ் மற்றும் ஆப்டிடியூட் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.பரிசு மற்றும் சான்றிதழ்: ஒவ்வொரு வகுப்பிலும் சரியாக பதில் அளிக்கும் சிறந்த 128 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு: https://ccg.icai.org/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !