உள்ளூர் செய்திகள்

மனநல படிப்புக்கு நிமான்ஸ் - சிறந்த கல்வி நிறுவனங்கள் (58)

ஆசியாவின் தலைசிறந்த மனநல மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்டு நியூரோசயின்ஸ்’ (நிமான்ஸ்) பெங்களூருவில் அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மனநல காப்பகமாக இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1925ம் ஆண்டு இதை மைசூரு அரசு மனநிலை மருத்துவமனையாக உயர்த்தியது. 1974ம் ஆண்டு மனநல மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் 1994ம் ஆண்டு நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது. மூளை தொடர்பான படிப்புகளை பிஎச்.டி., வரை இங்கு தொடர முடியும். மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் உதயுடன் நிமான்ஸ் இயங்கி வருகிறது. ஐ.சி.எம்.ஆர்., டி.எஸ்.டி., யு.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர்., உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் போன்ற சர்வதேச நிறுவனங்களும் இதற்கு நிதிஉதவி அளிக்கின்றன. இதில் உள்ள துறைகள்-பயோபிசிக்ஸ்-பயோஸ்டேட்டிக்ஸ்-எபிடமாலஜி-ஹியுமன் ஜெனிட்டிக்ஸ்-மென்டல் ஹெல்த் எஜுகேஷன்-மென்டல் ஹெல்த் அண்டு சோஷியல் சைக்காலஜி-நியூரோஅனிஸ்திசியா-நியூரோகெமிஸ்ட்ரி-நியூரோஇமேஜிங் அண்டு இன்டர்வென்சனல் ரேடியாலஜி-நியூரோலஜி-நியூரோமைக்ரோபயாலஜி-நியூரோபாத்தாலஜி-நியூரோபிசியாலஜி-நியூரோசர்ஜரி- நியூரோவைராலஜி- நர்சிங்- சைக்கியாட்ரிக் அண்டு நியூராலஜிக்கல் ரிஹபிலிடேஷன்- சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க்- சைக்யாட்ரி- சைக்கோபார்மாகோலஜி- ஸ்பீச் பாத்தாலஜி அண்டு ஆடியோலஜி இங்குள்ள படிப்புகள்- மாஸ்டர் ஆப் சர்ஜரி டிகிரி இன் நியூரோசர்ஜரி- டாக்டர் ஆப் மெடிசின் டிகிரி இன் சைக்கியாட்ரி-டிப்ளமோ இன் சைக்கியாட்ரி-போஸ்ட் டாக்டோரல் பெல்லோசிப் இன் சைல்டு அண்டு அடலசன்ட் சைக்கியாட்ரி-போஸ்ட் டாக்டோரல் பெல்லோசிப் இன் நியூரோஅனிஸ்திசியா-மாஸ்டர் ஆப் பிலாசபி இன் பயோபிசிக்ஸ்-மாஸ்டர் ஆப் பிலாசபி இன் மென்டல் ஹெல்த் அண்டு சோஷியல் சைக்காலஜி-மாஸ்டர் ஆப் பிலாசபி இன் சைக்கியாட்ரிக் சோஷியல் ஒர்க்-மாஸ்டர் ஆப் பிலாசபி இன் நியூரோபிசியாலஜி-மாஸ்டர் ஆப் பிலாசபி இன் நியூரோசயின்ஸ்-மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் சைக்கியாட்ரிக் நர்சிங் இதில் உள்ள பி.எஸ்சி., படிப்புகள்-பேச்சிலர் ஆப் சயின்ஸ் இன் நர்சிங்-பேச்சிலர் ஆப் சயின்ஸ் இன் ரேடியோகிராபிடிப்ளமோ படிப்புகளாக- சைக்கியாட்ரிக் நர்சிங்- நியூராலஜிக்கில் அண்டு நியூரோ சர்ஜிக்கல் நர்சிங்- கிளினிக்கல் நியூரோபிசியாலஜி டெக்னாலஜிஆகியவை நிமான்சில் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !