வெளிநாடு சென்று படிக்கலாம் (13)
வெளிநாடுகளுக்கு சென்று படிக்கச்செல்லும்போது அந்நாட்டின் விசா விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். மாணவர் விசா வழங்குவதற்கு ஒவ்வொரு நாடும் சில சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுகின்றன. பெருகி வரும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு, விசா பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கின்றனர். பொதுவாக மாணவர் விசா வழங்க உலக நாடுகள் ஐந்து முக்கிய தகவல்களை எதிர்பார்க்கின்றன. 1. நிதி தொடர்பான தகவல்கள்2. கல்வி தகுதி3. படிப்பு முடித்தபின் மேற்கொள்ள இருக்கும் எதிர்கால திட்டங்கள்4. ஆங்கில அறிவு5. குடும்ப தகவல்கள் வெளிநாட்டில் தங்கி, படிக்க தேவையான நிதிவசதி மாணவருக்கு உள்ளதா என்பது குறித்து விசா வழங்கும் முன் உறுதிப்படுத்திக்கொள்வர். நிதி வசதிக்கான ஆதாரமாக பிக்சட் டெபாசிட்கள், வங்கி அறிக்கை, வங்கி கடன் தொடர்பான கடிதம், நிதி உதவி செய்பவரின் வருமானம் (பெற்றோர், தாத்தா, பாட்டி, ரத்த சம்பந்தம் உடைய உறவினர்கள்) போன்ற தகவல்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வெளிநாடு செல்ல விசா ஏற்பாடு செய்யும்போது, அங்கு படிப்பு முடித்த பின் வேலையில் ஈடுபடுவது தொடர்பான எதிர்கால திட்டங்களை திட்டமிட்டு விசா பெறுவது, அறிவுப்பூர்வமான முடிவாக கருதப்படுகிறது. வெளிநாட்டில் படிப்பு முடித்தபின் தங்குவதற்கு, சில நாடுகள் அனுமதிப்பதில்லை. சில நாடுகள் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டில் பணி செய்வதை வரவேற்கின்றன. இருப்பினும் பெரும்பாலான நாடுகள் இதை விரும்பவில்லை. வெளிநாடு செல்ல விசா ஏற்பாடு செய்யும்போது, இதுதொடர்பான சான்றிதழ்களை விசா அலுவலரிடம் சமர்பிக்கவேண்டும். ஏனென்றால், பல நாடுகள் மாணவர்கள் தொடர்பான ஆவணங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கிறது. ஒவ்வொரு நாடும் சான்றிதழ்களை ஆவணங்களாக தயார் செய்ய தனிப்பட்ட முறைகளை மேற்கொள்கின்றன.