ஏற்றுமதி மேலாண்மை - துறை அறிமுகம்
எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் ஏற்றுமதி மேலாண்மை என்பது இன்று ஒரு முக்கியமான துறையாக விளங்குகிறது. உலகமயமாக்கலின் பின்பாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க உயரங்களை எட்டியுள்ளது. இது சர்வதேச வணிக நிர்வாகம் தொடர்புடைய தொழில்நுட்பம் படித்தவர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது என்பது தான் இளைஞர்களுக்கான செய்தி. சர்வதேச வணிகத்தில் மார்க்கெட்டிங், டாகுமெண்டேஷன், ஷிப்பிங், பேக்கேஜிங் போன்ற பிரிவுகளில் திறன் பெற்றிருப்பவருக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகமயமாக்கல் என்பது உலக வர்த்தகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி என்பதை அறிவோம். இது இந்தியா போன்ற நாடுகளில் ஏற்றுமதி தொடர்பான சிறப்புத் திறனாளர்களுக்கான தேவையை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி தொடர்புடைய முக்கிய முடிவுகளான விலை நிர்ணயம், மூலப் பொருள் கிடைக்கச் செய்வது, காஸ்டிங், ஏற்றுமதி தொடர்பான சந்தை ஆய்வு, வினியோகம், ஏற்றுமதி நிதி, அன்னியச் செலாவணி போன்றவற்றுடன் தொடர்புடைய படிப்பு தான் ஏற்றுமதி மேலாண்மை எனப்படும் எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட்.பொதுவாக இப் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர் எல்லாம் இதில் சேர்ந்து விட முடியாது. தரம் வாய்ந்த நுழைவுத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்ற வடிகட்டும் கட்டங்களைத் தாண்டிச் சென்று தான் ஒருவர் இதில் சேர முடிகிறது. அதிலும் இப் படிப்பை நல்ல தரமான கல்வி நிறுவனத்தில் படித்தால் தான் மதிக்கப்படும் திறன்களைப் பெற முடியும். இப் படிப்புக்காக பிரபல நிறுவனங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், பொது அறிவியல், நடப்புச் செய்திகள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் இடம் பெறுகின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த கல்வி நிறுவனங்களான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் போன்றவையும் இதர தனியார் கல்வி நிறுவனங்களும் நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர்களை இப் படிப்பில் அனுமதிக்கின்றன. இப் படிப்பில் சேருவோருக்குத் தேவைப்படும் பிரத்யேக குண நலன்களை குழு விவாதமும் நேர்முகத் தேர்வும் பரிசோதிக்கின்றன. பொதுவாக இத்துறைப் படிப்பில் சேர பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். காமர்ஸ் படித்திருப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற துறை. இத் துறையில் சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகள் தரப்படுகின்றன. டிப்ளமோ படிப்பதற்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படிப்பவருக்கு உலக வர்த்தக சூழல் பற்றிய அறிவு, வர்த்தகக் காரணிகள், சர்வதேச வணிக விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் பற்றிய நுணுக்கங்கள் கற்றுத்தரப்படுகிறது. அடிப்படையில் எளிதில் நன்றாகப் பழகத் தெரிந்திருப்பது, கடினமான சூழல்களைக் கையாளும் திறன், குறித்த காலத்தில் இலக்கை எட்டும் தன்மை மற்றும் மிகச் சிறந்த தகவல் பரிமாற்றத் திறன் போன்றவை தேவைப்படுகின்றன. இப்படிப்பைப் படிப்பவருக்கு மார்க்கெட்டிங், டாகுமெண்டேஷன், பேக்கேஜிங் துறை நிறுவனங்களிலும் சர்வதேச வணிக நிறுவனங்களிலும் மிகச் சிறந்த பணிகள் கிடைக்கின்றன. இதைப் படிப்பவருக்குப் பணி வாய்ப்புகள் கிடைக்கும் பிற பிரிவுகள் இவை தான். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏற்றுமதிப் பிரிவுஏற்றுமதி நிறுவனங்கள்வணிக நிறுவனங்கள்ஸ்டார் மற்றும் சூப்பர் ஸ்டார் வணிக நிறுவனங்கள்எக்ஸ்போர்ட் பிராசசிங் மண்டலங்கள்ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள்கார்கோ கிளியரிங் மற்றும் ஹேண்டிலிங் ஏஜென்சிக்கள்மரைன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்பேக்கேஜிங் நிறுவனங்கள்ஏற்றுமதித் துறையில் இயங்கிடும் சிறப்பு சுய நிறுவனங்களிலும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளிலும் இப் படிப்புடன் கூடிய திறனாளர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அந்த நாட்டின் ஏற்றுமதியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு உள்ளதால் இத் துறையினருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் எப்போதுமே உள்ளது. இத் துறை சார்ந்த எக்சிகியூடிவ் பணியாளர்கள் மிகச் சிறந்த ஊதியங்களைப் பெறுகின்றனர். பயிற்சியின் தொடக்கத்திலேயே மாதம் ரூ.8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊதியம் கிடைப்பது சாதாரணம். சர்வதேச வணிகம் மற்றும் ஏற்றுமதி தொடர்புடைய அறிவுத் திறன் பெருகப் பெருக ஊதியமும் கணிசமாக அதிகரிக்கிறது. பொதுவாக பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுமே இத்துறையினருக்கு நல்ல ஊதியத்தைத் தருகின்றன. திறன் படைத்தவர்களுக்கு வானமே எல்லை என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக இத்துறை விளங்குகிறது. துறையின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...National Institute of Export Management,AG, Anandraj Villa, 7, Second Canal Cross Road, Gandhinagar, Adyar, Chennai 600 020, www.niemglobal.com Indian Institute of Materials Management Plot Nos. 102 & 104, Sector 15, Institutional Area CBD Belapur, Navi Mumbai – 400614 www.iimm.org Indian Institute of International Business No: 21, Kumaran Nagar Main Road, Anna Nagar East, Chennai. 600102 www.iiib.net Indian Institute of Commerce and Your browsermay not support display of this image.Trade SaptRishi, 5/28 Vikas Nagar Lucknow226022 www.iictindia.com Indian Institute of Foreign Your browser may notsupport display of this image.Trade, New Delhi IIFT Bhawan, B21, Qutab Institutional Area New Delhi www.iift.edu Indian Institute of Packaging, Mumbai E2 MIDC Area, Andheri East, Post Box No. 9432, Mumbai – 400093 www.iipin.com S. P. Jain Institute of Management and Research,Mumbai Munshi Nagar, Dadabhai Road, Andheri West, Mumbai 400 058, India www.spjimr.org Symbiosis Institute of InternationalBusiness, Pune,Symbiosis Infotech Campus, Plot No. 15, Rajiv Gandhi Infotech Park, MIDC, Hinjewadi, Pune 411 057 Maharashtra www.siib.ac.in The Delhi School of Economics, Delhi University Contact Information Delhi School of Economics University of Delhi Delhi 110007, India www.econdse.org