உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் கல்வி வழங்கும் டி.இ.ஆர்.ஐ., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (69)

மத்திய அரசின் ‘தி எனர்ஜி அண்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்’ இந்தியாவின் சுற்றுச்சூழல், ஆற்றல், வளங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம். இதன் சார்பில் 1998ல் டி.இ.ஆர்.ஐ., பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ‘டி.இ.ஆர்.ஐ., ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் மத்திய அரசால் நிகர்நிலை பல்கலைக்கழகமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அறிஞர் ராஜேந்திர பச்சோரி இதன் வேந்தராக செயல்பட்டு வருகிறார். இயற்கை அறிவியல், சுற்றுச்சூழல், ஆற்றல் குறித்த படிப்புகளுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் டி.இ.ஆர்.ஐ., கடந்த ஆண்டு வரை ‘இந்தியா ஹேபிடட் சென்டரி’ல் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது. 2008 முதல் டில்லியில் வசந்த் கஞ்ச் என்ற பெயரில் அமைந்த புதிய வளாகத்தில் செயல்படுகிறது. இங்குள்ள துறைகள்- நேச்சுரல் ரிசோர்சஸ்- பயோரிசோர்சஸ் அண்டு பயோடெக்னாலஜி- எனர்ஜி அண்டு என்விரான்மென்ட்- பாலிசி ஸ்டடீஸ்- ரெகுலேட்டரி அண்டு பாலிசி ரிசர்ச் இந்த பல்கலைக்கழகம் வழங்கும் ஆராய்ச்சி படிப்புகள்- எனர்ஜி அண்டு என்விரான்மென்ட்- ரெகுலேட்டரி அண்டு பாலிசி ரிசர்ச்- பயோரிசர்ச் அண்டு பயோடெக்னாலஜி- நேச்சுரல் ரிசோர்சஸ் இங்கு வழங்கப்படும் முதுநிலை படிப்புகள்- எம்.எஸ்சி., என்விரான்மென்டல் ஸ்டடீஸ்- எம்.எஸ்சி., நேச்சுரல் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்- எம்.எஸ்சி., வாட்டர் ரிசோர்சஸ் மேஜேன்மென்ட்- எம்.பி.ஏ., இன்பிராஸ்டிரக்சர்- எம்.பி.ஏ., பிசினஸ் சஸ்டெயினபிலிட்டி- எம்.ஏ., பப்ளிக் பாலிசி அண்டு சஸ்டெயினபில் மேனேஜ்மென்ட்- எம்.எஸ்சி., ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்- எம்.எஸ்சி., பிளான்ட் பயோடெக்னாலஜி- எம்.எஸ்சி., கிளைமேட் சயின்ஸ் பாலிசி- எம்.எஸ்சி., எகனாமிக்ஸ்- எம்.டெக்., ரினீவபிள் எனர்ஜி, இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மென்ட் இங்குள்ள முதுநிலை டிப்ளமோ- டிப்ளமோ ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்- ரெகுலேஷன் இன் அக்ரிகல்சர்- ரெனிவபிள் எனர்ஜி2 ஏக்கர் பரப்பளவில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 60 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும், 25 சதவீதம் வரை நீரை சேமிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். ஹாஸ்டல், நூலகம், ஆய்வுக்கூடம், கம்ப்யூட்டர் மையம் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. நவீன வசதிகளுடன் முன்மாதிரி வளாகமாக இதை அமைத்துள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடனும் இணைந்து ஆய்வுப்பணிகளை டி.இ.ஆர்.ஐ., மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !