உள்ளூர் செய்திகள்

சிறிய எழுத்துப் பிழையால் வேலைக்கு ஆபத்து

வேலைக்காகத் தயார் செய்து தரப்படும் பயோடேட்டாவில் உள்ள சிறு டைப்பிங் பிழையால் வேலை கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதை இளைஞர்கள் பலர் அறிவதில்லை. கனடாவில் சமீபத்தில் டெலிபோன் மூலமாக நடத்தப்பட்ட ஒரு சர்வே இதைத் தெரிவிக்கிறது. 100 நிர்வாகிகளிடம் போனில் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் 20 சதவீதத்தினர் ஒரு எழுத்துப் பிழையால் கூட ஒருவருக்கு வேலை மறுக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகக் கூறினர். 28 சதவீதத்தினர் 2 பிழைகள் வரை பொறுத்துக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர். பயோடேட்டா என்பது விண்ணப்பதாரருக்குக் கிடைக்கும் மகத்தான வாய்ப்பு. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான அறிவுரையாக அமைந்தது. எனினும் 19 சதவீதத்தினர் 4 பிழைகள் வரை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். பொதுவாக பயோ டேட்டாவுடன் கூடிய விண்ணப்பங்களில் காணப்படும் பிழைகளும் எதை எழுத நினைத்தார்களோ அது அடைப்புக் குறிக்குள்ளும் இங்கே தரப்படுகிறது. Dear Madman (Dear Madam), I am attacking my resume for you to review ( I am attaching my resume), Following is a grief overview (Following is a brief overview) Have a keen eye for derail (Have a keen eye for detail).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !