வீடியோ எடிட்டிங் - துறை அறிமுகம்
மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் படைப்பாற்றல் சிந்தனை கொண்டவர்களுக்கு வீடியோ எடிட்டிங் விருப்பமான துறையாகத் திகழ்கிறது. விசுவல் மீடியாவின் கலை வடிவங்களை ரசனையுடனும் அர்த்தத்துடனும் தருவதில் வீடியோ எடிட்டிங் முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு வீடியோ பதிவுகளை வெட்டியும் ஒட்டியும் மாற்றியமைத்து மறுசீரமைப்பு செய்து வீடியோ பதிவின் இறுதி வடிவத்தைத் தருவதை வீடியோ எடிட்டிங் என்று கூறுகின்றனர். தயாரிப்புக்குப் பிந்தைய நிலைகளில் வீடியோ எடிட்டிங்கிற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இதில் ஈடுபடுவோர் வீடியோ எடிட்டர் என அழைக்கப்படுகின்றனர். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு போன்ற டிராக்குகளை எடிட் செய்து திரைப்படம், கேபிள் மற்றும் இதர ஒலி ஒளி வடிவங்களில் முக்கியப் பங்காற்றுகின்றனர். ஒரு வீடியோ எடிட்டரின் திறமையைப் பொறுத்தே வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என்றே கூறலாம். வீடியோ எடிட்டிங்கில் ஒரு நாடாவிலிருந்து மற்றொரு நாடா மற்றும் லீனியர் எடிட்டிங், நான் லீனியர் எடிட்டிங், டிஜிட்டல் வீடியோ எடிட்டிங் என 2 பிரிவுகள் உள்ளன. டிஜிட்டல் வீடியோ எடிட்டிங்கில் கம்ப்யூட்டரின் உதவியுடன் திரையில் பார்த்துக் கொண்டே எடிட்டிங் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. லீனியர் எடிட்டிங் முறையில் தேவையான பகுதிகளை மட்டும் ஒரு நாடாவிலிருந்து மற்றொரு நாடாவிற்கு காப்பி செய்கின்றனர். டிஜிட்டல் மீடியாவின் எளிமையான பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக இதுவே தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. திரைப்படச் சுருள்களையும் வீடியோ பதிவுகளையும் செய்ய தற்போது வெப்சைட்டுகளிலும் வீடியோ எடிட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்டர்நெட்டில் உள்ள ஆன்லைன் வீடியோ பதிவுகளிலும் வீடியோ எடிட்டர்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. தகுதி, படிப்புகள்வீடியோ எடிட்டிங் படிப்பதற்கென முறையான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்படவில்லை. டிஜிட்டல் வீடியோ எடிட்டிங்கில் பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் பயன்பாடுகளையும் வீடியோ எடிட்டிங்கில் பயன்படும் புரொகிராம்களையும் பற்றி படித்துப் பயிற்சி பெற வேண்டும். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்புபவர்கள் அந்தந்த கல்வி நிறுவனம் நிர்ணயித்திடும் தகுதிகளைப் பெறுவது அவசியமாகும். டிஜிட்டல் வீடியோ எடிட்டர்களாகச் செயல்படுபவர்கள் பொதுவாக அனிமேஷன் அல்லது மீடியா ஆர்ட்ஸ் பட்டப்படிப்பை அல்லது முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். வீடியோ எடிட்டிங் படிப்பில் எடிட்டிங் பற்றிய ஒட்டு மொத்த கருத்துக்களும் அவை ஒன்றொடொன்று எவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன என்பதும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதைப் படிக்கும் மாணவர்களுக்கு முறையான மற்றும் படிப்படியான பயிற்சிகள் தருவதன் மூலமாக எடிட்டிங்கிற்குப் பயன்படும் கருவிகள் அடைந்துவரும் மாற்றங்களும் உபயோகங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப வல்லுனர்களாக லீனியர் மற்றும் நான் லீனியர் எடிட்டிங்கில் பயன்படும் உபகரணங்களுடன் அவர்கள் பயிற்சி பெற வேண்டும். தியரிடிகல் பயிற்சி, பிராக்டிகல் பயிற்சி, தொலைக்காட்சி வடிவங்களின் தயாரிப்புக்கு பிந்தைய பயிற்சி போன்ற பயிற்சிகளின் மூலமாக திறன் வளர்க்கும் பகுதிகள் உள்ளன. வீடியோ எடிட்டிங்கில் பயன்படும் உபகரணங்கள் தான் மாறுகிறதே தவிர அடிப்படையில் மாற்றம் எதுவுமில்லை. இத்துறையில் ஆன் தி ஜாப் எனப்படும் நடைமுறைப் பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சாப்ட்வேர் எடிட்டிங் பேக்கேஜூகளுடனான பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. டிஜிடல் வீடியோ எடிட்டிங்கில் விண்டோஸ் மூவி மேக்கரில் தொடங்கி பைனல் கட் புரோ, யூலிட் மீடியா ஸ்டுடியோ, அவிட் மீடியா கம்போசர், எக்ஸ்பிரஸ் புரோ, அடோப் பிரீமியர் போன்ற தொழில்நுட்ப ரீதியான பேக்கேஜூகளில் பயிற்சி தரப்படுகிறது. தேவைப்படும் குணங்கள்சுய உந்து சக்தி உள்ளவர்கள் இதற்குப் பொருத்தமானவர்கள். விபரங்களை அறியும் ஆர்வம், ஆய்வு மனப்பான்மை, கவனிக்கும் திறன், குழுவாகப் பணியாற்றும் குணம் ஆகியவையும் தேவைப்படுகின்றன. தொழில்நுட்பத் திறமையும் கற்பனை சக்தியும் அவசியத் தேவைகளாக இருக்கின்றன. இவை தவிர கம்ப்யூட்டர் திறமை, டிஜிட்டல் உபகரணங்களைக் கையாளும் ஆர்வம் போன்றவையும் தேவைப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது கற்றுப்பயன்படுத்தும் திறமை வெற்றிக்கு வழிகாட்டியாக அமைகிறது. வாய்ப்புகள்கல்லூரியில் பெறும் பட்டப்படிப்பு என்பது இதற்கு முக்கியமில்லை. எனினும் விசுவல் ஆர்ட்ஸ், பைன் ஆர்ட்ஸ், மல்டி மீடியா, ஐ.டி., மீடியா ஸ்டடிஸ் போன்ற ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருந்தால் பயிற்சிக்கு உதவியாக இருக்கும். டிஜிடல் வீடியோ எடிட்டிங்கிலோ மீடியா ஆர்ட்ஸிலோ பட்டம் முடித்தவர்கள் வீடியோ எடிட்டிங் துறையில் நுழையும் வாய்ப்புகளும் அதிகம். ஒரு ஒளிப்பதிவின் இறுதி வடிவத்தில் எது எப்படி இருக்க வேண்டும், எது நீக்கப்பட வேண்டும், எவ்வளவு இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும் என்பது போன்ற மிக முக்கிய முடிவுகளை வீடியோ எடிட்டர்கள் தான் எடுக்கின்றனர். எனவே திரை வெளியீடுகளில் இவர்களின் பணியானது மிக முக்கியமானது. வீடியோ எடிட்டிங் முடித்தவர்களுக்கு திரைப்படம் மற்றும் டிவி தயாரிப்பு ஸ்டுடியோ, வெப்டிசைன் நிறுவனங்கள், விளம்பரம் மற்றும் மல்டி மீடியா நிறுவனங்கள் ஆகியவற்றில் மிகச் சிறந்த பணி வாய்ப்புகள் உள்ளன. தனியாக புரடக்ஷன் நிறுவனங்கள் மற்றும் மோஷன் பிக்சர் ஸ்டுடியோக்களையும் இவர்கள் துவங்கலாம். பொதுவாக அதிக அளவிலான வீடியோ எடிட்டர்கள் பிரீலான்ஸ் முறையிலேயே பணி புரிகின்றனர். பொழுது போக்குத் துறையில் தற்போது ஏற்பட்டு வரும் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக திறமையான வீடியோ எடிட்டர்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளும் அபாரமான சம்பளமும் கிடைக்கிறது. இணைய தளங்களில் ஸ்ட்ரீமிங் வீடியோ மற்றும் மூவி கிளிப்ஸ் உபயோகம் அதிகரித்து வருவதால் வீடியோ எடிட்டர்களுக்கு நல்ல தேவையிருக்கிறது. தொடக்கத்தில் மாதம் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். பிரீலான்ஸ் பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு என்ற அடிப்படையில் ஊதியம் பெறுகின்றனர். திறமையைப் பொறுத்து சிறப்பான வருமானம் தரும் துறை இது. வீடியோ எடிட்டிங் கல்வி நிறுவனங்கள் Film and Television Institute of Tamil Nadu, Chennai( Tamil Nadu )CIT Campus , Chennai ( Chennai Dist. ) 600113 Satyajit Ray Film and Television Institute, Kolkata (West Bengal)E.M. ByPass Road, PO. Panchasayar, Kolkata (Kolkata Dist.) 700094 Sri Aurobindo Institute of Mass Communication, New Delhi (Delhi) Sri Aurobindo Society, New Mehrauli Road, Adchini, New Delhi (Delhi) 110017 Asian Academy of Film and Television, Noida (Uttar Pradesh)Marwah Studios Complex, FC 14/15 Film Centre,Sector 16A , Noida (Gautam Buddha Nagar Dist.) 201301 Editworks School of Mass Communication, Noida (Uttar Pradesh)C 56/12, Institutional Area, Sector 62, (Delhi NCR),Noida (Gautam Buddha Nagar Dist.) 201307 Academy of Animation Art and Technology, Kolkata (West Bengal)Shrachi Tower, 686 Anandapur, 4th Floor, Kolkata (Kolkata Dist.) 700107 CD.I.T. (Centre for Development of Imaging Technology), Thiruvallam (Kerala)Chithranjali Hills, Thiruvallam (Thiruvananthapuram Dist.) 695027 Mantra Motion Media, New Delhi (Delhi)13/A, II Floor, Dot House, Ganesh Nagar, Laxmi Nager,New Delhi (Delhi) 110092 National Institute of Film and Fine Arts (N.I.F.F.A.), Kolkata(West Bengal)35 A, Townshend Road, Kolkata ( Kolkata Dist. ) 700025 RACE The Animation College, Somajiguda(Andhra Pradesh)5th floor, Vista Grand Towers, Rajbhavan Road,Somajiguda (Hyderabad Dist.) 500082 Sadhna Academy for Media Studies, Noida (Uttar Pradesh)C457, Sector10 , Noida (Gautam Buddha Nagar Dist.) 201301 Bihar Institute of Film and Television (B.I.F.T.), Patna (Bihar)Patliputra Colony, Patna (Patna Dist.)