உள்ளூர் செய்திகள்

தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி வழங்கும் ‘சி-டாக்’ - சிறந்த கல்வி நிறுவனங்கள் (76)

நவீன தகவல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பிரத்யேகமான கல்வி நிறுவனம் ‘சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’ (சி-டாக்). இது புனேயில் 1988ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் துணை மையங்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, மொஹாலி, மும்பை, டில்லி, நொய்டா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பினான்ஷியல் அண்டு கேபிடல் மார்க்கெட் சிமுலேஷன் அண்டு மாடலிங், நெட்ஒர்க் அண்டு இன்டர்நெட் சாப்ட்வேர், ஹெல்த்கேர், ரியல் டைம் சிஸ்டம்ஸ், இ-கவர்னன்ஸ், டேட்டா வேர்ஹவுசிங், டிஜிட்டல் லைப்ரரி, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், நேச்சுரல் லேங்குவேஜ் புராசசிங் ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறது. சி-டாக் தனது கல்வி நிறுவனமான ‘அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் டிரைனிங் ஸ்கூலை’ 1993ம் ஆண்டு தொடங்கியது. புனே, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நுõற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களும் இந்த கல்வி நிறுவனத்துக்கு உள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை மற்றும் உயர்கல்வியை இந்த கல்வி நிறுவனம் வழங்குகிறது. இங்கு வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகள்- அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்- வி.எல்.எஸ்.ஐ., டிசைன்- வயர்லெஸ் அண்டு மொபைல் கம்ப்யூட்டிங்- அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் ஆர்ட்ஸ்- ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்- லாங்குவேஜ் கம்ப்யூட்டிங்- எம்படட் சிஸ்டம்ஸ் டிசைன்- ஹெல்த்கேர் இன்பர்மேட்டிக்ஸ்- சிஸ்டம் சாப்ட்வேர் டெவலப்மென்ட்- அட்வான்ஸ்டு பிசினஸ் கம்ப்யூட்டிங்- அட்வான்ஸ்ட் கோர்ஸ் இன் பயோஇன்பர்மேட்டிக்ஸ்- கம்ப்யூட்டர் மல்டிலிங்குவல் அப்ளிகேஷன்ஸ்- ஜாவா- இ-காமர்ஸ்- ஆபிஸ் ஆட்டோமேஷன்ஸ் அண்டு அப்ளிகேஷன்ஸ்- ஆட்டோமேஷன் அண்டு பினான்ஷியல் அக்கவுன்டிங்- கிராபிக்ஸ் அண்டு மல்டிலிங்குவல் டெஸ்க்டாப் பப்ளிஷிங்- மல்டி லிங்குவல் வெப் டெக்னாலஜி- மல்டி மீடியா கிரியேஷன்ஸ் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்புகள்- மல்டி லிங்குவல் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்- மல்டி லிங்குவல் கம்ப்யூட்டர் புரோகிராமிங்- போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மல்டிலிங்குவல் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சான்றிதழ் படிப்புகள்- டிஜிட்டல் அண்டு அனலாக் வி.எல்.எஸ்.ஐ., டிசைன்- கம்ப்யூட்டர் பேசிக்ஸ் அண்டு மல்டிலிங்குவல் டெக்னாலஜி- ஆபிஸ் ஆட்டோமேஷன்- விஷுவல் பேசிக்- ஆரக்கிள் - லீப் ஆபிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்