நவீன முறை கல்வி!
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் துவக்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கடந்த 30 ஆண்டுகளாக சமூகத்திற்கு தேவையான திறன்களை பெற்ற பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. நவீன படிப்புகள்இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல பாடத்திட்டங்களில், நவீன தொழில்நுட்பங்களை இணைத்து புதிய பாடங்களை வழங்குகிறது. உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் போன்ற பாடங்களை குறிப்பிடலாம். அனைத்து தொழில் நிறுவனங்களில் 'ஆட்டோமேஷன்' அத்தியாவசிய தேவையாகி வரும் சூழலில், பி.இ., பி.டெக்., ரோபோட்டிக்ஸ் & ஆட்டோமேஷன், ஏரோனாட்டிகல் போன்ற படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய பெரும்பாலான மாணவர்களின் தேர்வு, பெரும்பாலும் கணினி மற்றும் தொழில்முறை பாடப்பிரிவுகளாக உள்ளன. தொழில்முனைவோருக்கென தனியாக இன்குபேஷன் மையமும் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்லும் வகையில் அவ்வப்போது பாடங்கள் புதுப்பிக்கப்பட்டு, 'அவுட்கம் பேஸ்டு' கல்விமுறை பின்பற்றப்படுகிறது. நவீன வகுப்பறைகள்'ஸ்மார்ட் கிளாஸ்ரூம்' வாயிலாக வீடியோ, பி.பி.டி., பிளாக்ஸ்பாட் போன்றவற்றை பயன்படுத்தி வகுப்புகள் நடைபெறுகிறது. 'கூகுள் கிளாஸ்ரூம்' செயலிகள் வாயிலாக மாணவர்களுக்குப் பாடம் தொடர்பான தரவுகளை பகிர்வது, தேர்வுகள் நடத்துவது, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகள் வாயிலாகவும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், 'இ-கன்டென்ட்' தரவுகள் வாயிலாக மாணவர்கள் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறுகிறார்கள். ஆக்மெண்டட் & விர்சுவல் ரியாலிட்டி, சைபர் செக்யூரிட்டி, எல்க்ட்ரிக்கல் வாகனம் ஆகிய வசதிகள் கொண்ட நவீன ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதேநேரம், தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு பெருகி வரும் இக்காலக்கட்டத்தில் மாணவர்கள், தங்கள் இணைய பயன்பாட்டை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும், அதீத தொழில்நுட்ப சாதன பயன்பாட்டிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, இலக்கை நிர்ணயித்து, பயணிக்க கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னை ஐ.ஐ.டி.,யில் அட்வான்ஸ்டு மேனுபாக்சரிங் டெக்னாலஜி டெவலப்மெண்ட் மையம் உட்பட பல்வேறு மையங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. -டி.லஷ்மிநாராயணசுவாமி, நிர்வாக அறங்காவலர், என்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள், கோவை.info@snrsonstrust.org0422-4500000