உள்ளூர் செய்திகள்

கல்வி மூலம் நாட்டை கட்டமைப்பதில் என்சிஇஆர்டி பெரும் பங்களிப்பு- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதுடில்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் (என்சிஇஆர்டி) 65வது ஆண்டு நிறுவன நாள் விழா நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு உரையாற்றினார்.விழாவில், ஒடிசாவின் சிறந்த 100 பிரபலங்களின் வாழ்க்கை முறை மற்றும் பங்களிப்பை பதிவு செய்த புத்தகத்தை அவர் வெளியிட்டார்.பின்னர் உரையாற்றிய அவர், “இந்திய கல்வி முறையின் தனித்துவமிக்க நிறுவனமாக என்சிஇஆர்டி திகழ்கிறது. பல தலைமுறை மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அர்ப்பணிப்புடன் பங்களித்துள்ளது. கல்வி மூலம் நாட்டை கட்டமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.மேலும், சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கொண்டு மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை என்சிஇஆர்டி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்