தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி தினமலர்-பட்டம் இதழ், ஆச்சாரியா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.புதுச்சேரி தினமலர்-பட்டம் இதழ், ஆச்சாரியா கல்விக் குழுமம் இணைந்து பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி, கொரவள்ளிமேடு சுப்ரமணிய படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்க 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். போட்டியின் இறுதியில் 9ம் வகுப்பு மாணவர்கள் தேவ் ஆனந்த், வைஷ்ணவி அணி முதலிடம், பிளஸ் 1 மாணவியர் சுஜி, அட்சயா அணி இரண்டாமிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் தி சுசான்லி குழுமம் மற்றும் வி ஹெர்பல் நிறுவன இன்ஜினியர் கவுதம், டாக்டர் பானுபிரியா ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.