உள்ளூர் செய்திகள்

எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும் புத்தக திருவிழாவில் மல்லை தமிழர் சங்க தலைவர் பேச்சு

திண்டுக்கல் : சமூகம் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என மல்லை தமிழர் சங்கம் உலக பண்பாட்டு இயக்கம் தலைவர் சத்யா பேசினார்.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,இலக்கிய களம் சார்பில் டட்லி பள்ளி மைதானத்தில் நடந்த புத்தக திருவிழாவில் அவர் பேசியதாவது: புத்தகத் திருவிழாவில் பங்கேற்பது ஒரு அரிய நிகழ்ச்சி. பழநியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. திண்டுக்கல் பூட்டை நினைத்து மனது கனத்துப் போனது. காரணம் உலக புகழ்பெற்ற அந்த பூட்டை செய்வதற்கு தற்போது ஆட்கள் இல்லாமல் போனது. அகத்தை திறந்து புதிய மனிதனாக மாற்றும் ஆற்றல் கொண்டவை புத்தகங்கள். 1000 புத்தகங்கள் விற்பனை செய்வதற்கு தள்ளுபடி என பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய நிலை உள்ளது.இந்த சமூகம் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும். வாசிப்பை நெருக்கமான இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். உலக வரலாற்றையே பல புத்தகங்கள் மாற்றிக் காட்டியுள்ளன.மனித மாண்புகளை விண்ணுக்குச் சொல்லும் பெருமை கொண்ட சிலப்பதிகாரத்தில் தமிழச்சியின் அறச்சீற்றம் மன்னனை மண்டியிட வைத்த பெருமை கொண்டது. புராணம், இலக்கியம் மட்டுமின்றி இன்றைய நடைமுறைக்கும் அறச்சீற்றத்தின் தேவை இருக்கிறது. ஈழத்தில் தமிழர்களை கொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி என்றாவது ஒருநாள் தமிழ் ஈழம் மலர்வதற்கு அறச்சீற்றம் உதவும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்