உள்ளூர் செய்திகள்

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி ஒப்படைப்பு: அரசு பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு குவியுது பாராட்டு

கமுதி: சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் பாராட்டி கவுரவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வீரபாண்டி, சந்தோஷ், மகாராஜன் ஆகியோர் டிச.,08 மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் தங்கச்செயினை கண்டெடுத்தனர். அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று பரிசோதனை செய்ததில், அந்த நகை தங்கம் தான் என்றும் அதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் எனவும் தெரிந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்களும் அந்த தங்க நகையை சாயல்குடி போலீஸ் ஸ்டேசன் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் இந்த செயலைக் கண்டு, அவர்களை பாராட்டிய போலீசார், இன்று காலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பாக 3 மாணவர்களுக்கும் வாழ்த்து ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தனர். அவர்களுக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்