புதிதாக அமையவுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி - இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சங்கராபுரம்: மூரார்பாளையத்தில் புதிதாக பெண்கள் மேல்நிலை பள்ளி திறக்க முதல்வர் ஜெ., அறிவித்ததையொட்டி, இனிப்பு வழங்கினர். சங்கராபுரம் ஒன்றியம் மூரார்பாளையத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறக்க, தமிழகமுதல்வர் உத்தரவிட்டார். இதையொட்டி, நேற்று காலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சசி, தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஒன்றிய சேர்மன் பேசுகையில், "விரைவில் அமைச்சர் மோகன் மூரார் பாளையத்தில் புதிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியை திறந்து வைப்பார். பள்ளி திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெ., அமைச்சர் மோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.