உள்ளூர் செய்திகள்

விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக அறிமுகம் செய்ய ஒடிசா மாநில அரசு பரிசீலனை

பவானிபட்னா: ஆரம்பக் கல்வி முதல், பல்கலை கல்வி வரை, விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக அறிமுகம் செய்ய, ஒடிசா மாநில அரசு பரிசீலித்து வருகிறது, என, அம்மாநில விவசாய அமைச்சர் பிரதீப் மகாரதி கூறினார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: விவசாயம் பற்றியும், இயற்கை உரங்கள் பயன்பாடு மற்றும் மண் பரிசோதனை குறித்தும், மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால், விவசாயத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க, ஆரம்பக் கல்வி முதல், பல்கலை கல்வி வரை, விவசாயத்தை ஒரு கட்டாய பாடமாக்குவது குறித்து, மாநில அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மகாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்