உள்ளூர் செய்திகள்

புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உயரும்- பாலகுருசாமி

கோவை: புதிய பொருட்கள் கண்டறியப்படும் போது தான் நாட்டின் பொருளாதாரம் உயரும் என முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு 2024 நாளை (அக்., 26) கோவை நவஇந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.இதுகுறித்து இ.பி.ஜி., அறக்கட்டளை தலைவர் மற்றும் முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு, 2024 என்பது மாணவர்களையும், நிபுணர்களையும் ஒன்றிணைத்து சமூக சவால்களை எதிர்கொள்ளும் மாற்றத்தை உருவாக்கும் நிகழ்வு. இந்தியாவில், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றை முன்னேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரதமர் வரும், 2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என, கூறியுள்ளார்.அனைவரும் சேர்ந்து தான் நாட்டை உயர்த்த வேண்டும். அது புதிய கண்டுபிடிப்புகள், வாயிலாக மட்டுமே சாத்தியம். ஜி.டி.பி., உயர்வதை வைத்து மட்டும் வளமான நாடாக கருத முடியாது. தனிநபர் வருவாய் அதிகரித்தால் மட்டுமே நாடு வளமானதாக கருத முடியும். இளைஞர்களை புதிய பொருட்களை கண்டறிய ஊக்கப்படுத்த வேண்டும். புதிய பொருட்கள் கண்டறியப்படும் போது தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். இதற்கு சிறந்த கல்விக்கொள்கை வேண்டும். நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் வளரும். அதைக்கருத்தில் கொண்டே பெண்களை அதிகாரமூட்டல் மற்றும் சமூகம் வளரும் என்ற கருபொருளை மாநாட்டின் மையமாக கொண்டுள்ளோம். மாநாடு பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு கவனம் செலுத்தும். மாணவர்கள் உண்மையான சமூக பிரச்னைகளை தீர்க்க நவீன யோசனைகளை வழங்குவதற்கான களமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.இ.பி.ஜி., அறக்கட்டளை, நிர்வாக அறங்காவலர் பிந்து விஜயகுமார், ஆதித்யா கல்வி குழும தலைவர் சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்