உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் மீது தாக்குதல் - கல்லூரி முதல்வர் மீது புகார்

கரூர்: கரூர் அருகே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய, மாணவர்கள் மீது பாலிடெக்னிக் முதல்வர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், ஐ.நா., சபையில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், அரசு கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று காலை கரூர் அருகே வெள்ளியனையில் உள்ள வெங்கட்ரமணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த போவதாக, கல்லூரி முதல்வர் ராஜேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, கல்லூரி முதல்வர் ராஜேஷ்குமார் அடித்து விட்ட தாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாலிடெக்னிக் கல்லூரியில் முதலா மாண்டு டி.எம்.இ., படித்து வரும் மாணவர் சதீஸ்குமார் கூறுகையில், "இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த கல்லூரி முதல்வர் ராஜேஸ்குமாரிடம் ஆதரவு கேட்டோம். ஆனால், அவர் ஆத்திரம் அடைந்து, அய்யப்பராஜா, கிருபாகரன், ஜீவானந்தம், அருண்செல்வம் மற்றும் என்னையும் சேர்த்து அடித்து விட்டார்.&'&' என்றார். இது குறித்து பாலிடெக்னிக் முதல்வர் ராஜேஷ் குமார் கூறுகையில், "எங்களுக்கும் இலங்கை பிரச்னை தொடர்பாக கோபமும், ஆவேசமும் உள்ளது. தற்போது, மாணவர்களுக்கு தேர்வு நேரம் நெருங்குகிறது. இதனால், படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். இதை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு விட்டனர். மாணவர்களின் கோரிக்கைளை நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம்,&'&' என்றார். தகவலறிந்த கரூர் டி.எஸ்.பி., இளங்கோ, வெள்ளியனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்மொழி அரசு ஆகியோர், வெங்கடரமண பாலிடெக்னிக் முதல்வர் ராஜேஷ்குமாரிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்