உள்ளூர் செய்திகள்

குழாய் பணி இழுபறியால் ரோட்டைக் கடக்க முடியாமல் சிரமப்படும் பள்ளிக் குழந்தைகள்

திருப்பூர்: இரண்டாவது மண்டல அலுவலகம் முன், குடிநீர்  குழாய் பதிக்கும் பணி இழுபறியாக இருப்பதால், பள்ளி குழந்தைகள் ரோட்டை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகம், பிச்சம்பாளையம் புதூரில் இயங்கி வருகிறது. பழைய அலுவலகம் முன்பாக உள்ள காலியிடத்தில், தனியார் பள்ளி குழந்தைகள் காத்திருந்து, பள்ளி வாகனத்தில் ஏறிச் செல்கின்றனர். பிச்சம்பாளையம் புதூர் பகுதிகளுக்கான குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி, கடந்த மாத இறுதியில் துவங்கியது. குழாய் பதிப்பதற்காக, பொதுமக்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் குழி தோண்டப்பட் டது. ஒரு வாரத்துக்கு மேல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. ரோட்டின் ஓரமாக குழி தோண்டியதால், பள்ளி வாகனங்கள் காலியிடத்துக்கு வராமல் ரோட்டிலேயே பள்ளி குழந்தைகளை இறக்கி விடுகின்றன. குழந்தைகள் குழியை தாண்டிச்செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில், குழியை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் பதிக்க ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி, குழியை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமாரிடம் கேட்டபோது, "குடிநீர் குழாய் பதித்து, பிரதான குழாயுடன், லிங்க் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில், பணிகள் நடக்கின்றன. இணைப்பு பணி துவங்கியுள்ளதால், விரைவில் குழி மூடப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்