உள்ளூர் செய்திகள்

இட நெருக்கடியில் செயல்படும் அரசு பள்ளிக்கு தனி இடம் ஒதுக்க கோரிக்கை

அவலூர்பேட்டை: மேட்டு வைலாமூரில் இட நெருக்கடியில் செயல்படும் அரசு உயர் நிலைப் பள்ளிக்கு தனி இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் மேட்டுவைலாமூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப் பள்ளி ஒரே இடத்தில் செயல்படுகின்றன. 35 சென்ட் அளவுள்ள நிலப்பகுதியில் இரண்டு பள்ளிகளும் இட நெருக்கடியில் உள்ளன. உயர்நிலைப் பள்ளியில் 147 மாணவர்கள், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்75 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் விளையாடுவதற்கான மைதானம் மற்றும் கழிவறை கட்டட வசதிகள் செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேப்பிரம்பட்டு சாலை அருகே 4.95 ஏக்கர் நிலப்பரப்பிலான அரசு புறம்போக்கு இடத்தில் உயர்நிலைப் பள்ளியை இடமாற்றம் செய்ய மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த இடத்தில் வருவாய் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து பள்ளி கட்டடம் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்