மண்டல வாள் சண்டை போட்டியில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
திருப்பூர்: மண்டல அளவிலான வாள் சண்டை போட்டியில் திருப்பூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான வாள் சண்டை போட்டி, கோபியில் நடைபெற்றது. இதில் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கோபி உள்ளிட்ட கல்வி மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள் பங்கேற்றன. சபேர், எபி, பாயில் உள்ளிட்ட பிரிவுகளில் குத்துச்சண்டை போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் வெற்றிபெற்று, சேலத்தில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் விவரம் 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் அவிநாசி கொங்கு கல்வி நிலையம் மாணவர் சுபாஷ் (சபேர் பிரிவு) முதலிடம்; திருப்பூர், ஹயகிரீவர் வித்யாலயாவின் தரணிதரன் (சபேர்) இரண்டாமிடம் பெற்றனர். மாணவியர் பிரிவில், கொங்கு கல்வி நிலையத்தின் விவிதா (பாயில் பிரிவு) முதலிடம்; பெரியாயிபாளையம் அரசு பள்ளி மாணவி சந்தியா (பாயில்) மூன்றாமிடம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர்கள் திலீப்குமார், பாலாஜி, மனோஜ் (மூவரும் எபி பிரிவு) ஆகியோர் இரண்டாமிடம்; அதே பள்ளியை சேர்ந்த மனோஜ் (எபி), தினேஷ்ராம் (பாயில்), தங்கபாண்டி (சபேர்) ஆகியோர், மூன்றாமிடம் வென்றார். மாணவியர் பிரிவில் பெரியாயிபாளையம் அரசு பள்ளியின் லலிதா (பாயில்) முதலிடம்; பவித்ரா (பாயில்) இரண்டாமிடம். 19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் சின்னசாமியம்மாள் பள்ளி மாணவர்கள் பிரவீன் (சபேர்), சக்திவேல் (எபி) ஆகியோர் மூன்றாமிடம்; மாணவியர் பிரிவில் அவிநாசி கொங்கு கல்வி நிலையம் மாணவிகள் பவித்ரா (எபி), சங்கீதா, மோகனப்பிரியா (இருவரும் சபேர் பிரிவு), இந்துமதி (பாயில்) ஆகியோர் முதலிடம்; அனுஷியா (சபேர்) இரண்டாமிடம்; பிரியதர்ஷினி (எபி), ஸ்வேதா (பாயில்) ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர்.