உள்ளூர் செய்திகள்

மொபைல் போன் மூலம் இயங்கும் பளூ தூக்கும் வாகனம்; மாணவர்கள் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் மொபைல் போன் மூலம் இயங்கும் ரோபர்ட் பளூ தூக்கும் வாகனத்தை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதை கண்டுபிடித்த மின்னியல், மின்னணுவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் விஜய சங்கர், அபிஷேக், லூயிஸ் ராஜ் கூறியதாவது: இந்த வாகனத்தை ‘ஆன்ட்ராய்டு’ மொபைல் போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதற்காக ஆன்ட்ராய்டு போனில் ஒரு ‘ஆப்சன்’ உருவாக்கி உள்ளோம். இதை புளூடூத் மூலம் கட்டளை அனுப்பி அதற்கேற்ப இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குரல் கட்டளை இணைத்துள்ளோம். பெங்களூர் டெக்சாஸ் இன்ஸ்டூரூமென்ட் கம்பெனியின் எம்.எஸ்.பி.430 மைக்ரோ கண்ட்ரோலரை பயன்படுத்தி உள்ளோம். இந்த ரோபர்ட்டிற்கு கை பொருத்தப்பட்டு அதன் மூலம் 10 கிராம் வரை எடையுள்ள பொருட்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு செர்வோ மோட்டாரும், கட்டுபடுத்த செர்வோமோட்டார் கன்ட்ரோல் சர்க்யூட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு 6 வோல்ட் லித்தியம் அயான் பேட்டரிகள் உள்ளன. எல்லா போர்டுக்கும் 5 வோல்ட் மின்சாரத்தை அனுப்பும், புளூடூத் பொதுவாக கட்டளை, குறிப்பேடு அனுப்பவும் வாங்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் புளூடூத்தை மைக்ரோ கன்ட்ரோலரில் கட்டளை வாங்குவதற்கு பயன் படுத்துகிறோம். தற்போது இந்த மாதிரி வாகனத்தின் மூலம் 20 மீட்டர் தூரத்திலிருந்து 10 கிராம் எடையுள்ள பொருட்களை தூக்குவதற்கு பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் இதை ‘வைபை’ இணைய தளத்தை மொபைல் போனில் இணைத்து 150 மீட்டர் தூரத்திலிருந்து மொபைல் போன் மூலம் இந்த வாகனத்தின் ரோபர்ட் கையை பலப்படுத்தி 5 கிலோ எடையுள்ள பொருட்களை தூக்குவதற்கு பயன்படுத்த முடியும், என்றனர். மாணவர்கள், துறை தலைவர் பள்ளி கொண்ட ராஜசேகரனை வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்