உள்ளூர் செய்திகள்

பி.ஏ., ஓராண்டு படித்தவருக்கு பணி; தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து

மதுரை: மூன்றாண்டு பி.ஏ., பட்டத்தை, ஓராண்டில் படித்தவருக்கு, ஆசிரியர் பணி வழங்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.மதுரை, ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், 1990ல் பி.எஸ்.சி., கணிதம் படிப்பில் சேர்ந்தார். அது சிரமமாக இருந்ததால், முதல் இரண்டு ஆண்டுகள் முடித்ததும், மூன்றாவது ஆண்டு, மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில், பி.ஏ., வரலாறு சேர்ந்தார். அவருக்கு பல்கலை விலக்களித்து, பி.ஏ., வரலாறு மூன்று ஆண்டுகளுக்குரிய பாடங்களில் தேர்வு எழுத அனுமதித்தது. பாபுவிற்கு 1995ல் பி.ஏ., வரலாறு பட்டம் வழங்கப்பட்டது. பின், பாரதியார் பல்கலையில் பி.எட்., பட்டம் பெற்றார்.ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிட்டது. பாபு, 2014ல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். அவருக்கு தகுதி இல்லை என, டி.ஆர்.பி., நிராகரித்தது. அதை எதிர்த்து, பாபு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.அரசுத் தரப்பு, &'பாபு பி.ஏ., வரலாறு ஓராண்டு தான் படித்துள்ளார். பணி நியமனத்திற்கான தகுதிகளை பெற்றிருக்கவில்லை. இதனால், அவருக்கு பணி வழங்கவில்லை&' எனத் தெரிவித்தது.தனி நீதிபதி, &'பணி வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பணி வழங்க டி.ஆர்.பி., பரிசீலிக்க வேண்டும்&' என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., தலைவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, &'தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது&' என்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்