காசி தமிழ் சங்கமம் அனுபவ பகிர்வு போட்டி: கவர்னர் மாளிகை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு, 2023 - 2.0 காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு&' என்ற தலைப்பில், கவர்னர் மாளிகை சார்பில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, டிச., 17 முதல் டிச., 30 வரை, மீண்டும் வாரணாசியில், காசி தமிழ் சங்கமம், 2.0 - 2023 நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து ஏழு வகைப் பிரதிநிதிகள், ஏழு குழுக்களாக காசியை பார்வையிட செல்வர். முதற்குழுவினர் சென்றுள்ளனர்.அவர்களுக்கு, 2023 - 2.0 காசி தமிழ் சங்கமத்தின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் கவர்னர் ரவி போட்டிஅறிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்போர், தங்கள் காசி தமிழ் சங்கமம் அனுபவங்களை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில், 1,000 வார்த்தைகளுக்கு குறையாமல், தட்டச்சு செய்தோ அல்லது கையால் தெளிவாக எழுதியோ, அனுப்பி வைக்க வேண்டும்.கட்டுரையை, கவர்னரின் துணை செயலர், பல்கலைகள், கவர்னர் செயலகம், கவர்னர் மாளிகை, கிண்டி, சென்னை - 22 என்ற முகவரிக்கு அல்லது, kts2023rbtn@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு, ஜன.,16க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டியில் பங்கேற்போர் தங்கள் பெயர், முகவரி, காசி தமிழ் சங்கமம் குழுவின் வகை, மொபைல் போன் எண்களை தெளிவாக குறிப்பிட்டு,கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும்.சிறந்த பகிர்வுகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று சிறந்த கட்டுரைகள் என்ற முறையில், கவர்னரால் பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்படும்.ஏழு பிரிவுகளில் இருந்தும் தலா மூன்று பேருக்கு முதல் பரிசாக 10,000; இரண்டாம் பரிசாக 7000; மூன்றாம் பரிசாக 5000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.