உள்ளூர் செய்திகள்

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தர நிலை சான்றிதழ்

புதுச்சேரி: விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவ வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, அவசர கால மருத்துவ சிகிச்சை தொழில் நுட்ப பயிற்சி மற்றும் நடைமுறையில் சிறந்து விளங்கும் மிக உயர்ந்த தரநிலைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து டீன் செந்தில் குமார் கூறுகையில், இந்திய அவசர கால மருத்துவ சங்கம், சென்னையில் தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்தியது.இதில் எங்கள் கல்லுாரியின் அவரச கால மருத்துவ சிகிச்சை தொழில் நுட்ப பிரிவுக்கு இதனை சார்ந்த பயிற்சி மற்றும் நடைமுறையில் மிக உயர்ந்த அளவில் சிறந்து விளங்கும் கல்லுாரி என்ற தரநிலை சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளது என்றார்.இந்த அங்கீகாரத்தை, இந்திய அவசர கால மருத்துவ சங்கத்தின் தலைவர் சரவணகுமார் மற்றும் துணைத் தலைவர் சாய்சுந்தர் ஆகியோர் வழங்கினர். கருத்தரங்கில், அவசர மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப பிரிவு உதவி பேராசிரியர் அஜித்குமார் சிறப்புரையாற்றினார்.இந்த அங்கீகாரம், கிடைத்தமைக்கு பல்கலை வேந்தர் கணேசன் மற்றும் துணைத்தலைவர் அனுராதா கணேசன் ஆகியோர் தங்களின் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்