உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை போராட்ட ஆயத்த மாநாடு ஜாக்டோ ஜியோ முடிவு

சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்.,1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.தொடக்க கல்விதுறையில் உள்ள 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்க செய்யும் அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட 21 மாத சம்பளம் மாற்ற நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாலை 4:30 மணிக்கு அந்தந்த மாவட்ட தலைநகரில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.மாயவன், ஜெ.காந்திராஜ் தெரிவித்துள்ளனர்.மேலும் பிப்.15ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், பிப்.,26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதென தீர்மானித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்