உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் ஆதாரை புதுப்பிக்க பயிற்சி வகுப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் ஆதாரை புதுப்பிக்கும் பணிக்காக, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு, ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து பயிற்சியை வழங்குகிறது. இதில், ஆதார் புதுப்பிக்கும் பணி மற்றும் புதிதாக ஆதார் எடுத்தல், கைரேகை பதிவு, கருவிழிகள் பதிவு உள்ளிட்டவைகள் பதிவேற்றம் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.எல்காட் நிறுவன ஒருங்கிணைப்பாளர் சபரி பயிற்சி வழங்கினார். இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்-பாளர் சத்தியசீலன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒரு வாரத்திற்கு பயிற்சி பெறும் தன்னார்வலர்கள், பள்ளிகள் திறந்தவுடன் ஒவ்வொரு ஒன்றியமாக சென்று அரசு பள்ளி மாணவ, மாணவியரின் ஆதாரை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்