அறவியல், அறிவியல் இரண்டும் நமது கண்கள் : கருத்தரங்கில் தகவல்
மதுரை: நம் பண்பாட்டில் அறவியல், அறிவியல் இரண்டும் நமது கண்கள் என்று நம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர் என மதுரையில் நடந்த கருத்தரங்க நிகழ்வில் பேசினர்.மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இலக்கியப்பட்டறை நிகழ்ச்சி நேற்று துவங்கி டிச. 21 வரை நடக்க உள்ளது. மதுரை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசிலா பேசுகையில், மாணவர்கள் எந்தத் துறையில் பயின்றாலும் இலக்கிய, இலக்கணம் தெரிந்து கொண்டால் நன்று. இலக்கியம் என்பது வழிகாட்டி என்றார்.மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், மனித குலத்திற்காகத் தோன்றிய மகத்தான இலக்கியம் திருக்குறள். உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அறவியல், அறிவியல் இரண்டும் நமது கண்கள். நம்முடைய முன்னோர்கள் சிறந்த சிந்தனையாளர்கள் என்றார்.உலக செம்மொழி தமிழ்ச்சங்க தலைவர் மெய்ஞானி பிரபாகரபாபு, பேராசிரியர் கற்பகம் உட்பட பலர் பேசினர். சென்னை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சத்தியப்பிரியா, பேராசிரியர் மஞ்சுளா, பெர்லின், வள்ளி உட்பட பல்வேறு மாவட்டத்தினர் பங்கேற்றனர்.