எழுத்தாளர் ரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது
கோவை : கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில், கடந்த 2010ம் ஆண்டு முதல் இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில், விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.15ம் ஆண்டு விருது வழங்கும் விழா, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் ரா.முருகன் குறித்த, ஏகார்டன் ஆப் ஷேடோஸ் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் இயற்றிய முப்பட்டை கண்ணாடியின் உலகம் என்ற நுால் வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து, ரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.விழாவில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பேக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், கோபாலகிருஷ்ணன், ரம்யா ஆகியோர் பங்கேற்றனர்.