சிவில் சர்வீஸ் தேர்வில் முறைகேடு! பூஜா கேத்கருக்கு முன்ஜாமீனை மறுத்த கோர்ட்!
புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வு முறைகேடு வழக்கில் பூஜா கேத்கருக்கு புதுடில்லி ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தவர் பூஜா கேத்கர். மாற்று திறனாளிக்கான முன்னுரிமை, ஓ.பி.சி., போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, அவரது தேர்வை ரத்து செய்து யு.பி.எஸ்.சி., ஆணையம் உத்தரவிட்டது.இந் நிலையில், முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி பூஜா கேத்கர் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சந்திரதாரி சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது;வழக்குப் பதிவு வலுவாக செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டும். அதற்கு விசாரணை அவசியம். முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்.இவ்வாறு கூறிய நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.