உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சி.ஏ., படித்தால் பொருளாதாரத்தை நிர்ணயிக்கலாம் ஆடிட்டர் சந்தியா வழிகாட்டல்

புதுச்சேரி: மாணவர்கள் சி.ஏ., படித்தால் இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கலாம் என இந்திய பட்டய கணக்காளர் நிறுவன ஆடிட்டர் சந்தியா பேசினார்.புதுச்சேரியில் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர், பேசியதாவது:பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது அவர்களின் மனதில் போர்க்களமாக உள்ளது. மாணவர்கள் பட்டய கணக்காளர் (சி.ஏ.,) படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். இதற்கு அடிப்படை கல்வி என்று எதுவும் இல்லை. இது தொழில் சம்மந்தமான படிப்பு. சி.ஏ., படிப்பதற்கு வயது தடையில்லை. அனைத்து வயதினரும், குடும்பமாகவும், படிக்கலாம். பத்தாம் வகுப்பு முடித்தவுடன், சி.ஏ., படிக்க பதிவு செய்யலாம்.லோக்சபாவில் சட்டம் இயற்றப்பட்டு, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும் சி.ஏ., தேர்வு எழுதலாம். சி.ஏ., படிக்க முதலில் பவுண்டேஷன் தேர்வு எழுத வேண்டும். அதில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இரண்டாவதாக இன்டர் கோர்ஸ் படிக்க வேண்டும். 2 ஆண்டுகள் முடிந்து ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி பெற வேண்டும்.அதன்பின், இறுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், சி.ஏ., அங்கீகாரம் கிடைக்கும். ஆண்டிற்கு 3 முறை நடக்கும் இத்தேர்வில், மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும்.இத்துறையில் கம்பெனிகளில் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரியான கேள்வி, சரியான நேரத்தில், சரியாக கேட்க தெரிய வேண்டும். இது தான் இத்தொழிலுக்கு முக்கியம். இரண்டாண்டு பயிற்சியின்போதே, வருமானம் கிடைக்கும். உங்களால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியும். கல்லுாரியில் வேறு பாடப்பிரிவு படித்தாலும், கூடுதலாக சி.ஏ.,வும் படிக்கலாம்.யாராவது சி.ஏ., கஷ்டம் என கூறினால், இது சுதந்திரமாக கேள்வி கேட்கவும், பொருளாதார அங்கீகாரம் கொடுத்தது என கூறுங்கள். சி.ஏ., படித்தால் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம், சட்ட சிக்கல்களை தீர்க்கலாம். இந்திய பொருளாதாரத்தை நீங்கள் நிர்ணயம் செய்யலாம்.இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. நேரடியாக சென்று உங்களின் சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்