உள்ளூர் செய்திகள்

பெண்கள் பாதுகாப்புக்கு சகோ திட்டம்; பள்ளி, கல்லுாரிகள் முன் வருகிறது கேமரா

கோவை: பெண்களின் பாதுகாப்புக்காக, பாதுகாப்பான கோவை (சகோ) திட்டத்தை, கோவை மாநகர போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். திட்டத்தின் வாயிலாக மாநகரின், 100 பஸ் ஸ்டாப் நிழற்குடைகளில், கண்காணிப்பு கேமரா, அவசர கால அழைப்பு பட்டன்(எஸ்.ஓ.எஸ்.,) நிறுவ, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அவசர கால அழைப்புக்கான பட்டன், ஸ்பீக்கர் மற்றும் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.அதிலுள்ள பட்டனை அழுத்தும் போது, மென்பொருள் வாயிலாக, இருமுனையிலும் தகவல்களை, பரிமாறிக் கொள்ள முடியும். பெண்களுக்கு ஏதேனும், அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ, பட்டனை அழுத்தினால், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.போலீஸ் கட்டுப்பாட்டு அறை திரையில், வீடியோ வாயிலாகவும் பேச முடியும். கட்டுப்பாட்டு அறை போலீசார் பிரச்னைகளை கேட்டு, உடனடியாக பீட் போலீஸ் மற்றும் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர். அவர்கள் உடனடியாக அங்கு சென்று பாதுகாப்பு வழங்குவர்.ரூ.15 கோடி அனுமதி ரூ.10 கோடி மதிப்பில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசும் திட்டத்தை செயல்படுத்த ரூ.15 கோடி வரை வழங்க அறிவுறுத்தியுள்ளது.திட்டத்தை மேம்படுத்தும் விதமாக அனைத்து பள்ளி, கல்லுாரிகளின் நுழைவாயிலிலும், இதே போன்று கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்