உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வி சிறார் இதழ்களில் அரசு உதவி பள்ளி மாணவர்களின் படைப்புகள் புறக்கணிப்பு

கோவை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த, வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிக்கல்வி துறை சார்பில், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக, 'புது ஊஞ்சல்' என்ற இதழும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, 'தேன்சிட்டு' என்ற இதழும் வெளியிடப்படுகின்றன.இத்தகைய சிறார் இதழ்கள், மாணவர்களின் சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற படைப்பாற்றல்களை வெளிக்கொணரும் தளமாக உள்ளன.ஆனால், இந்த இதழ்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் படைப்புகள் வெளியிடப் படுவதில்லை என, தலைமையாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதேபோல, ஆசிரியர்களுக்காக வெளியிடப்படும், 'கனவு ஆசிரியர்' இதழிலும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் படைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.தற்போது, அரசு பள்ளி களுக்கு இவ்விதழ்கள் வகுப்பு ஒன்றுக்கு, ஒரு பிரதியாக இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், அங்கு பயிலும் மாணவர்களுக்கும், பணிபுரியும் ஆசிரியர் களுக்கும் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை.அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'நடப்பு கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், நுாலக மற்றும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'புது ஊஞ்சல்' மற்றும் 'தேன்சிட்டு' இதழ்களிலும் நம் மாணவர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டால், அவர்களின் படைப்பாற்றல் பெரிதும் ஊக்குவிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்