மாணவர்களிடம் இருவழி புரிதல் பாதிப்பு தீர்வு காண்பது அவசியம்: சரண்யா ஜெயகுமார்
கொரோனாவுக்கு பின், பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், 'மொபைல்' போனில் வீடியோ பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது என, அதிக நேரம் செலவழிக்கின்றனர். முன்னோர், திரைப்படம் பார்க்கையில், ஒரு சண்டை காட்சியின் போது, 'அடி, குத்து, விடாத, அப்படி தான்' எனக் கூறுவதை பார்க்க முடியும். அது 'இருவழி' தொடர்பு. ஆனால், தற்போது உள்ள தலைமுறையினர், வெறுமனே வீடியோக்களை மட்டும் பார்க்கின்றனர். அவர்களிடம் சிரிப்பு, அழுகை என, எந்த ஒரு பாவமும் தெரியாது. ஏனெனில், தற்போதுள்ள தலைமுறையினரிடம், 'ஒருவழி' தொடர்பு மட்டுமே உள்ளது. இருவழி தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மனநல ஆலோசகர்களால் தீர்வு காண முடியும். முறையான பயிற்சி இல்லாமல், ஆசிரியர்களால் மனநல ஆலோசகர்களாக முடியாது. - சரண்யா ஜெயகுமார், இயக்குநர், ஜேப்பியார் உளவியல் ஆராய்ச்சி அகாடமி.