சிறப்பு டெட் தேர்வில் ஒரே தகுதி மதிப்பெண்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
சென்னை: 'சிறப்பு டெட் தேர்வில் பணிபுரியும், ஆசிரியர்கள் அனைவருக்கும், தகுதி மதிப்பெண்ணாக, 40 சதவீதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்' என, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் செல்லையா, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், வரும் ஜூலை 4, 5ம் தேதிகளில், 'டெட்' நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒரே பள்ளியில், ஒரே பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, வெவ்வேறு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்தால், முரண்பாடு ஏற்படும். எனவே, அனைவருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும். கேரளாவில், எம்.பில்., பி.எச்.டி., படித்த ஆசிரியர்களுக்கு, டெட் தகுதித் தேர்வில் இருந்து, விலக்கு வழங்கப்பட்டு உள்ளது.அது போல், தமிழகத்திலும், விலக்கு அளிக்க வேண்டும். எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை கருதி, அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி மதிப்பெண்ணாக, 40 சதவீதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.