ஜே.இ.இ., மெயின்ஸ் முதல் கட்டத் தேர்வு வேலம்மாள் போதி மாணவர்கள் சாதனை!
மதுரை: தேசிய அளவில் நடந்த ஜே.இ.இ., மெயின்ஸ் 2026 முதல் கட்டத் தேர்வில் வேலம்மாள் போதி வளாக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மொத்தம் 98 மாணவர்கள் 99 சதவீதத்திற்கும் மேல் பெற்றுள்ளனர். 191 மாணவர்கள் 98 சதவீதத்திற்கும் மேல், 283 மாணவர்கள் 97 சதவீதத்திற்கும் மேல், 381 மாணவர்கள் 96 சதவீதத்திற்கும் மேல், 460 மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் மேல் மற்றும் 840 மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் மேல் பெற்று வளாகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளனர்.இச்சாதனைக்கு அனுபவமிக்க ஆசிரியர்கள், திட்டமிட்ட பயிற்சி முறை, தொடர் மாதிரி தேர்வுகள், தனிப்பட்ட வழிகாட்டுதல் காரணமாக அமைந்தன. மாணவர்களின் விடாமுயற்சி, ஒழுக்கம், உறுதியான உழைப்பும் ஒரு காரணம்.சாதனை படைத்த மாணவர்களை கல்விக்குழுமம் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், இயக்குநர் எம்.வி.எம்.சசிகுமார், கல்வி இயக்குநர் கீதாஞ்சலி சசிகுமார் பாராட்டினர்.அடுத்த கட்டத் தேர்வுகளிலும், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்விலும் சாதனை படைக்க மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர். வேலம்மாள் போதி வளாகம் மீண்டும் ஒருமுறை தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் முன்னணியில் திகழ்வதை இந்த சாதனை உறுதிப்படுத்துகிறது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.