உள்ளூர் செய்திகள்

சமூகத்தை மாற்றி அமைக்கும் சக்தியாக மாறுங்கள் பட்டமளிப்பு விழாவில் மாணவியருக்கு அறிவுரை

குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் அல்போன்சா, முதல்வர் சிஸ்டர் ஷீலா, டீன் டாக்டர் ஹேமா ஸ்ரீகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் மீனா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குன்னுார் அரசு கலை கல்லுாரி முதல்வர் சனில், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், “கல்லுாரி பயணம் என்பது, நீலகிரி மலைகளை போல செங்குத்தான ஏற்றங்களும், சவால்களும் நிறைந்தது. கல்வி திறனுடன் பொறுப்பு, லட்சியங்களையும் சரிசமமாக கையாண்டு மாணவிகள் இன்று சிறந்த ஆளுமைகளாக உருவெடுத்துள்ளனர்.மாணவிகள் பெற்றுள்ள இந்த பட்டம் அவர்களின் பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் உரித்தானது. 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்ற திருக்குறளுக்கு ஏற்ப, மாணவிகள் கற்ற அழியாத செல்வமான கல்வியை கொண்டு சமூகத்தில் துணிச்சல், நேர்மை, கருணையுடன் செயல்பட வேண்டும்,” என்றார். அதில், 215 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. முதுகலை பிரிவில், முதலிடம், இரண்டாம் பிடித்த மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்