உள்ளூர் செய்திகள்

கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்: தமிழக அரசு திட்டம்

கலை அறிவியல் படிப்புக்களை வழங்கும் அனைத்து பல்கலையையும் பயன்படுத்தி, ஒரே விதமான பாடத்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக, பல்கலை துணைவேந்தர்கள் தெரிவித்தனர். கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே விதமான பாடத்திட்டம் கொண்டு வருவது வரவேற்கக்கூடியது என்றாலும், பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபின், மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளை ஒரே பல்கலை கட்டுப்படுத்துமா, அல்லது அந்தந்த பகுதியில் உள்ள பல்கலை கட்டுப்படுத்துமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஒவ்வொரு பல்கலையின் கீழ் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகள், சுயமாக பாடத்திட்டத்தை உருவாக்கி, மாணவர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை பல்கலை மானியக்குழு அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், அது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளுக்கு பொருந்துமா என துணைவேந்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதால், ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாநிலத்தில் உள்ள வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும். ஒவ்வொரு பல்கலையிலும் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கென, பாடத்திட்டக்குழு உள்ளது. ஒரே பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்த குழுக்களுக்கு வேலையிருக்குமா என்பது தெரியவில்லை. உயர்கல்வித் துறை செயல்படுத்தவுள்ள புதிய நடைமுறை எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு பகுதியில் உள்ள பல்கலை, சுற்றுப்பகுதியில் உள்ள தொழில் வளம், வேலை வாய்ப்புக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வழங்க முடியும். ஒரே பாடத்திட்டம் கொண்டு வந்தால், ஒவ்வொரு பகுதியில் உள்ள தொழில்வளம், வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம் இடம் பெறாது என, வருத்தப்படுகின்றனர் உயர்கல்வித் துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்