அறிவியல் தமிழ் அறிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்கள், தமிழ் இலக்கியத்தில் அறிவு பெற வேண்டும் என்பதற்காக, "இளந்தமிழர் இலக்கிய பட்டறை" என்ற தலைப்பில், ஒரு வார காலம் பயிற்சி அளிக்கப்படும். இதில், கவிதை, கட்டுரை, பேச்சு, சிறுகதை, புதினம், அறிவியல் போன்ற பிரிவுகளில், தமிழின் மேன்மை குறித்தும், அறிவியல், கணினி போன்றவற்றில், தமிழை புகுத்துவது குறித்தும், பயிற்சி அளிக்கப்படும். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், இப்பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்று காலை துவங்கும், இப்பயிற்சி பட்டறை, இவ்வாரம் முழுக்க நடக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், வைகை செல்வன், பயிற்சி பட்டறையை துவக்கி வைக்கிறார்."காவல் கோட்டம்" வெங்கடேசன், பாரதி பாஸ்கர், சரளா ராஜகோபாலன், சுமதி, பேரா. தெய்வசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு, ஆய்வாளர்கள், பயிற்சி பட்டறையில் வகுப்பு நடத்துவர். காலை, 10:00 மணிக்கு துவங்கும், பயிற்சி பட்டறை, மதியம், ஒரு மணி வரையும், பின், மதியம், 2:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடக்கும். மாலையில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சென்னை, அடையாறில் உள்ள, இளைஞர் விடுதியில் மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி பட்டறைக்காக, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.