உள்ளூர் செய்திகள்

புதிய மருந்துகளை கண்டுபிடிக்க உதவும் பயோ இன்பர்மேடிக்ஸ் முதுகலை படிப்பு

இப்படிப்பு, உயிரியல் மற்றும் நோய்களுக்கான காரணிகளை அறிந்து, மருந்துகள் கண்டுபிடிக்கத் தேவையான அறிவினை வளர்க்கும்.  படித்த பின், பயோமெடிக்கலில் புது மருந்துகள் கண்டுபிடிப்பிலும், உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் தடுப்பூசி தயாரிப்பிலும் ஈடுபடலாம். மரபியல் புரோடியோமிக்ஸ், கட்டமைப்பு உயிரியல், மூலக்கூறு இயக்கங்கள் உட்பட்ட, ஜீன்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடலாம். ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில், உயிரி தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் போன்ற அனைத்து துறைகளிலும் பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது. சி.ஐ.ஐ., (Confederation of Indian Industry) நடத்திய ஆய்வில், பயோ இன்பர்மேடிக்ஸ் துறை, ஆண்டுதோரும் 10 சதவீத வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. கல்வித் தகுதி கம்யூட்டர் சயின்ஸ், அக்ரி, பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பார்மஸி மற்றும் லைப் சயின்சில் டிகிரி முடித்தவர்கள் எம்.எஸ்சி., மற்றும் எம்.டெக்., பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஐ.ஐ.ஐ.டி., (International Institute of Information Technology) ஹைதராபாத், அலகாபாத்.புனே பல்கலைக்கழகம்  புனே.மவுலானா ஆஷாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  போபால்.காமராஜர் பல்கலை  மதுரை.கோல்கட்டா பல்கலைக்கழகம்  கோல்கட்டா. மேலும் விவரங்களுக்கு www..iiit.ac.inwww.unipune.ac.inwww.manit.ac.inwww.mkuniversity.orgwww.caluniv.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்